பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

277


இலக்கிய நண்பரால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் ( ஜனவரி 1985 ) கனமான விஷயங்களைக் கொண்டுள்ளது.

இந்திய வைதீகமும் நாஸிகளும்- பிருமிள் தர்மு சிவராமின் கட்டுரை, ஞானியின் கல்லிகை, எனக்குள் ஒரு வானம் என்ற நெடுங்கவிதைகள் பற்றிய க. பூர்ணச்சந்திரனின் விரிவான விமர்சனம். அலெக்சாண்டார் ஸோல்ஸெனிட்சின் எழுதிய பேரழிவை நோக்கிச் செல்லும் மேற்கத்திய உலகம் என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு போரிஸ் பாஸ்டர்நாக் கவிதை ஒன்றின் தமிழாக்கம் மற்றும் தேவதேவன், பிருமிள், கலாப்ரோதீப் சுப்ரமணியன் கவிதைகள் ‘லயம்‘ முதல் இதழில் உள்ளன.

‘எதிர்முனை‘ என்ற தலைப்பில் ஒரு பகுதி. சில முக்கியமான செய்திகள், தகவல்கள் மீதான சுதந்திரச் சிந்தனைக் குறிப்புகள்—சுயேச்சையான உரத்த சிந்தனைகள்- இதில் காணப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான விமர்சனங்களும் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.