பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48. பொங்கும் தமிழமுதம்


‘தமிழீழத்திலும் தமிழீழத்திற்கு வெளியிலும் வாழும் மாணவர் சக்தியை கிளர்ந்தெழ வைத்து, தமிழீழப் போராட்டத்திற்கு மாணவர்களை அணி திரளச் செய்வதற்காக, தமிழீழ மாணவர் பேரவை ‘பொங்கும் தமிழமுதம்‘ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடுகிறது.

தமிழ் ஈழ மாணவர் பேரவையினர் தங்கள் குறிக்கோளை இந்தப் பத்திரிகையின் மூலம் தீர்க்கமாகவும் தெளிவாகவும் அறிவித்துள்ளனர்.

“உலகின் பல நாடுகளில் நடைபெற்ற போராட்ட வரலாறுகளில் நுரைத்தெழு வீர நடவடிக்கைகள் நடத்தப்பட்ட காலங்கள் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நீரில் நுரைக் குமிழ்கள் எவ்வளவு விரைவாகத் தோன்றி மறைகின்றனவோ, அவ்வளவு விரைவாகத் தோன்றி, அதைவிட வேகமாக மறைந்து விடுகின்றன. இவ்வகைப் போராட்டங்கள், கோரிக்கையை வென்றெடுப்பதோ அல்லது வரலாற்றில் நிலைப்பதோ இல்லை.

இத்தகைய நடவடிக்கைகளில் முன்னின்றவர்கள் அந்நாட்டு மாணவர்களே.

பொதுவாக இளைஞர் மத்தியில் எழக்கூடிய உணர்வுகளும், எதையும் ஆழமாகச் சிந்திக்காது வேகமாகச் செய்துவிடத் துடிக்கும் மனோபாவமும், இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப அவர்களது அச்சமற்ற உணர்வுகளும் விடுதலை என்பது ஓரிரு மாதங்களில் பெற்றுவிடக்கூடிய ஒரு அற்பவிடயம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து விடுவதால் இத்தகைய திட்டமிடப்படாத போராட்ட வரலாறு உருவாவதற்குக் காரணமாயிற்று.

தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் மாணவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடும் எந்த ஒரு இயக்கமும், எந்த வகையான செயற்திட்டங்களைக் கொண்டுள்ளது எனபது பற்றியும் மாணவர்கள் ஆராய்ந்தே தம்மால் முடிந்த அர்ப்பணிப்பைச் செய்ய முன்வரவேண்டும். நாம் நடத்தும்