பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

279


தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டம் உலகின் எப்பகுதியிலும் நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தை விடவும் இலகுவாக இருக்கப் போவதில்லை.

தமிழீழப் பிரதேச சமூகச் சூழ்நிலைகளையும் எதிரியின் சமூகச் சூழ்நிலைகளையும் மக்கள் தொகையையும் ஒப்பிட்டு நோக்குவோமாயின், தமிழீழப் போராட்டமானது ஏனைய போராட்டங்களைக் காட்டிலும், கடுமையாகத்தான் இருக்கும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒவ்வொரு செயல் வீரனையும் உலகின் ஏனைய விடுதலைப் போராட்ட வீரனைக் காட்டிலும் உயர்வாக்கப் போவது இக் கடுமையான போராட்டப் பரீட்சையே.

இத்தகைய கடுமையான போராட்டத்தில் தங்களை இணைத்து, தமிழீழ விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்க முன்வரும் ஒவ்வொரு இளைஞனும், மாணவனும், தமிழீழப் போராட்ட வரலாற்றில் ஒரு நுரைத் தெழு வீரசாகச காலகட்டத்தை ஏற்படுத்திவிட்டு இப்போராட்டக் களத்திலிருந்து மறைந்து விடாமல், ஒரு நீண்ட முடிவான போராட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வகையில் தமிழீழப் போராட்ட வரலாறு உலகில் நாளைய விடுதலை வீரர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைய வேண்டும்.

இன்று ஒடுக்கப்படும் நமது மக்களால் நடத்தப்படும் விடுதலைப் போராட்டம், ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.” (தமிழமுது-கிண்ணம் -1. துளி-7 அக்டோபர் 1984 )

தங்கள் லட்சியத்தையும், வரலாறு காட்டும் உண்மையையும் திடமாக எடுத்துக் கூறும் ‘தமிழமுது‘ குழுவினர், விடுதலைப் பேர்ராளிகளின் நோக்கையும் கடமையையும் இவ்வாறு நினைவில் பதித்துக் கொள்கிறார்கள்.

”நமது மண்ணையும் மக்களையும் சார்ந்து அவர்களது சொந்தப் பலத்திலும் பங்களிப்பிலும் இப்போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கு மக்களைத் தயார்படுத்த வேண்டும். இதனூடாகவே முழுமையான வெற்றியை ஈட்ட முடியும்.”

“சரியானதோர் பாதையில் மக்கள் போராட்டத்தை எடுத்துச் செல்வது இறுதி வெற்றிக்கு வழிகோலும்.” இக்கொள்கை வழியை