பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50. மல்லிகை


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இலக்கிய மாதப் பத்திரிகை ‘மல்லிகை’ இருபத்தோரு ஆண்டுகளாக வெற்றிகரமாக வளர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இலங்கை எழுத்தாளர் டொமினிக் ஜீவா, இலட்சியத் துடிப்போடும் கடின உழைப்போடும் உற்சாகமாக மல்லிகையை வளர்த்து வருகிறார்.

‘உழைப்பது, மல்லிகைக்காக உழைத்துக் கொண்டேயிருப்பது’ தான் ஜீவாவின் வாழ்க்கை ஆகும்.

‘உழைப்பும், பல பிரதேசங்களில் செறிந்து வாழும் ஈழத் தமிழர்களின் சுய முன்னேற்றமும் கலாச்சாரச் செழுமையும்தான் மல்லிகையின் குறிக்கோளாகும். மறைந்து— மறைக்கப்பட்டு— வாழும் கலைஞர்கள், படைப்பாளிகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதுதான் மல்லிகையின் பணியாகும். என்னதான் பாரிய கருத்து வித்தியாசங்கள் படைப்பாளிகளிடையே இருந்தபோதிலும்கூட, மல்லிகை எந்தக் கட்டத்திலும் சின்னத்தனமாகக் குறுகிய பார்வையுடன் நடந்துகொண்டதில்லை.’

இப்படி டொமினிக் ஜீவா மல்லிகையின் ஒரு இதழில் அறிவித்திருக்கிறார். அவருடைய ’இதய நேர்மையும் இலக்கிய நேர்மையும்’ அவரை அறிந்திருப்பவர்களுக்கு நன்கு புரியும்.

’நான் சத்தியத்தைப் போல உண்மையானவனாக இருக்க விரும்புகிறேன்’ என்பது ஜீவாவின் இதய ஒலி.

1984—ல் மல்லிகை தனது இருபதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளியிட்ட சிறப்பு மலரில், அதன் ’ஈடு இணையற்ற சாதனை’ குறித்து தி. க. சி. எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் நினைவுகூரத்தக்கவை.

“சுமார் 15 லட்சம் தமிழர்களைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து, 20 ஆண்டுகளாக ஒரு முற்போக்கு மாத இதழாக மல்லிகை எவ்வாறு