பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

வல்லிக்கண்ணன்


ஜீவிகளின் கூட்டுறவு முயற்சிதான் இக் காலாண்டு ஏடு. மலையக மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய சூழ்நிலை, பிரச்னைகள் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் கருத்து செலுத்தியது.

மலையக மக்கள் மத்தியில் எழுதாத இலக்கியமாய் வாழ்ந்து வளர்ந்த நாட்டுப் பாடல்களைச் சேகரித்து, ஏட்டில் எழுதாத இதயத்து ராகங்கள் என்று இதழ்தோறும் நிறையவே அச்சிட்டு வந்தது குறிப்பிடத்தகுந்த முக்கியமான பணி ஆகும்.

மலையக மக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகள் தீர்த்தக்கரையில் வெளிவந்தன. திறமையுள்ள இளைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் அவை.

“எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்தில் செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான்—சுற்றிலும் தமிழின் பெயரால் எழுகின்ற சந்தடிகளுக்கும், கலையின் பெயரால் நடக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் பாரதியின் எளிமையான இந்தக் கூற்று இன்னும் அதன் மகத்துவத்தைத் தாங்கி நிற்கின்றது. இந்தக் கூற்றினையே எமது தெய்வ வாக்காகக் கொள்வதில் பெருமைப்படுகின்றோம்.

ஆனால் இப்படிக் கூறுவதின் நோக்கம், ‘தமிழுக்கு உயிர்கொடுக்க வந்தோம்’ என்று சாதிக்கும் மமதை அல்ல. நாம் ஆற்றும் பணி மிக மிகச் சொற்பமானது என்பதை பிரக்ஞை பூர்வமாகவே தீர்த்தக்கரை உணர்ந்துள்ளது.

குழந்தை பிறந்தவுடனேயே எழுந்து நின்று எனக்கு யாருடைய உதவியும் தேவைப்படாது. என்னை நானே கவனித்துக் கொள்ள எனக்குத் தெரியும் என்று கூறி முகம் கழுவிச் சென்றால் யாருக்கும் சம்மதம்தான். இல்லை என்றாலும் யார்தான் கோபிக்கப் போவது ? குழந்தைகளாயிற்றே !

தீர்த்தக்கரையும் இந்தப் பருவத்தில் நின்றுதான் உங்கள் அரவணைப்புக்காகக் கரங்களை நீட்டுகின்றது, ஆனாலும் இந்தக் குழந்தையின் யாத்திரையில் முகம் கொண்டு அரவணைக்க முயலும் மழலைகளும்தான் எத்தனை. சமூகத்தில், பலவேறுபட்ட துறைகளில்