பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

305


புதிய மனிதன் முயற்சி செய்வான்.’

இப்படி நாவலித்தது அது தனது முதல் இதழில். மேலும் அது அறிவித்தது—

’இவனது இலக்கு—விடுதலை.

விடுதலைக்குப் போராட அனைத்து மக்களையும் புதிய மனிதன் அறைகூவுவான். விடுதலைக்கு வித்திடும் சிந்தனைகளை எல்லாம் திசைதோறும் கை நீட்டி புதிய மனிதன் வரவேற்கிறான்.

புதிய மனிதன் ஒரு கலை இலக்கியவாதி ஆகையால், வரும் சிந்தைனைகள் கலை இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இவனது விருப்பம்.

மக்களுக்காகப் படைப்பவர்களே ! நீங்கள் மக்கள் விரும்புகிற, மக்களுக்குப் புரிகிற கலை இலக்கியமாகப் படையுங்கள்’ என்று கூறியது.

புதிய மனிதன் ஒவ்வொரு இதழின் அட்டைச் சித்திரமும் அமைப்பும் கவிதை அழகோடு கருத்து நயம் செறிந்த ஓவியமாகத் திகழ்கிறது. இன்குலாப், இளவேனில், செ. கணேசலிங்கன், பாவண்ணன் கதைகள், கட்டுரைகள் வந்துள்ளன. பூமணி, ஆர். சூடாமணி கதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. வண்ணச்சிறகு, தமிழன்பன், பாரதிவண்ணன், பாவண்ணன் கவிதைகள், எஸ். சண்முகம் மொழிபெயர்த்துத் தருகிற ‘கறுப்புக் கவிதைகள்’ இந்தப் பத்திரிகைக்கு உணர்வூட்டுகின்றன.

சிந்திக்கத் தூண்டுகிற மற்றும் பல விஷயங்களும் உண்டு.

உங்கள் நூலகம் : ஒரு வித்தியாசமான முயற்சி. புத்துலகம் காண நல்ல தரமான நூல்களை வெளியிட்டு வரும் நியூசெஞ்கரி புக் ஹவுஸ், ’நியூ செஞ்சுரி வாசகர் பேரவை’ அமைத்திருக்கிறது. அதன் சார்பில் உங்கள் நூலகம் என்ற இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழ் ஒன்றை அது பிரசுரிக்கிறது.

இதன் முதல் ஏடு 1985 ஏப்ரலில் வெளிவந்தது.

’ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் விட்மனும் ஜாக் லண்டனும் கதேவும் டிரீசரும் தாந்தேவும் வி க் டர் ஹீகோவும். இப்சனும் டால்ஸ்டாயும்