பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

323


தலைப்பில் பல்வேறு விஷயங்கள், நிகழ்ச்சிகள் குறித்து கவாரஸ்யமான அபிப்பிராயங்கள் எழுதி வந்தார். ’இரத்தினச் கருக்கம்’ என்ற தலைப்பில், பொன்முடி என்னும் பெயரில்,சிந்தனைப் பொறிகளைத் தொகுத்துத் தந்தார்.

‘இரத்தினச் சுருக்கம்’ ரசமான, புதுமையான ஒரு பகுதியாக விளங்கியது. உதாரணத்துக்கு ரத்தினங்கள் இங்கே எடுத்து எழுதப்படுகின்றன—

‘நீங்கள் பிரமுகராக வேண்டுமானால் முதலில் மற்றவர்களைக் சாதாரணமானவர்களாக்கிவிட்டு முன்னால் வந்து நில்லுங்கள். மற்றவர்களைப் பிரமுகர்களாக்க வேண்டுமானால் நீங்கள் பின்னால் சாதாரண மாணவர்களாக ஒதுங்கி நின்றுகொண்டு மற்றவர்களுக்குத் தாராளமாக வழி விட்டுவிடுங்கள். பிரமுகராவதன் இரகசியம் முன்னால் ஓடுவதிலும், பின்னால் ஒதுங்கத் தயங்குவதிலும்தான் இருக்கிறது.’

‘சொல் அமைவது உரைநடை சொல் இசைவது கவிதை. பூ இணைவது சரம். பூக்களைத் தொடுப்பது மாலை.’

‘குழந்தைப் பருவத்தில் மெல்லிய ஊசி ஊசியாக விழும் பன்னீர் மாலைச் சாரலில் விரும்பி நனைவதுபோல் சிலரோடு உரையாடுவது தான் எத்தனை சுகமாயிருக்கிறது !’

இந்த விதமான, சுவையான, நயமான, எண்ண ஓட்டங்கள் நிறைந்தது இந்தப் பகுதி.

நா. பா. நாவல்கள் பல தீபம் இதழ்களில் தொடர்ந்து வந்தன. மணிவண்ணன், பொன்முடி என்ற பெயர்களில் நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் அதிகமாகவே அவர் எழுதினார். நெஞ்சக்கனல், கண், கபாடபுரம், செய்திகள், ஆத்மாவின் ராகங்கள் மற்றும் சில அவர் எழுதிய நாவல்களாகும்

நாவல் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தீபம் ஆற்றியுள்ள பங்கு கணிசமானது. ஆதவனின் காகிதமலர்கள், அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள், இந்திரா பார்த்தசாரதியின் தந்திர பூமி, தி. ச. ராஜுவின் காளியின் கருணை, ஆதிவாசிகளின் தலைவனான (பீகார் பழங்குடியினரின் பகவான்) பிர்ஸா பகவான் வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு மலர்மன்னன் எழுதிய மலையிலிருந்து வந்தவன், ஆர். சூடாமணியின் தீயினில் தூசு ஆகியவை தீபம் தொடர்கதைகளாக வந்தவைதான்.

இளைய எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், தேவகோட்டை வா. மூர்த்தி நாவல்களையும் அது வெளியிட்டிருக்கிறது.

ஆரம்ப முதலே தரமான, அருமையான குறுநாவல்களை தீபம் பிரசுரித்திருக்கிறது. இவை எண்ணிக்கையிலும் அதிகம். பிரபல எழுத்தாளர்கள், புதிய எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி நல்ல படைப்புக்களை வெளியிட்டு குறுநாவலின் வளர்ச்சிக்கு அது நல்ல சேவை செய்திருக்கிறது.

சிறுகதையின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் தீபம் ஆற்றியுள்ள பங்கு பெரிதாகும். சிறந்த கதைகள் எண்ணற்றவை இந்த இருபது ஆண்டு-