பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

345


பது, எந்தச் சந்தர்ப்பத்திலும் சுயலாபம் தேடுவது, அறிவு என்றால் பதவி வகிப்பது, பதவிகள் வகித்து முடிந்ததும் இந்தப் பதவியினால் லாபமில்லை என்று சொல்வது போலப் பல விஷயங்களை நாம் பார்க்கிறோம்.

அறிவுத் துறைகளில், விஞ்ஞானத் துறையிலும் விமரிசனத் துறையிலும் இன்று ஏற்பட்டிருக்கிற பஞ்சம் சொல்லி முடியாதது.

அறிவுப் போலிகளும், இலக்கியப் போலிகளும் கல்விப் போலிகளும் மலிந்துவிட்டதை நாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வை, புதிய நோக்கம் தமிழனுக்கு மிக அவசரமான தேவை. சமுதாயத்தில் தன் நிலையையும் தன்னிடம் உள்ள சமுதாய நோக்கையும் அவன் தெளிவுசெய்துகொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தோன்றுகிறது.

இதைத் தெளிவு செய்துகொள்ளவே எழுத்து, கலை உபயோகப்பட வேண்டும். நல்ல எழுத்தைத் தெரிந்து கொள்ள இயலாத சமுதாயம் நசிவுப் பாதையில் காலடி எடுத்துவைத்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”

இதை எழுதிய க. நா. சுப்ரமண்யம், சிறுபத்திரிகைகள்— இலக்கியப் பத்திரிகைகள்— படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை குறித்துப் பெருமைப்படலாம் என்றும் சொல்லியிருக்கிறார்:

“தமிழ் வாசகர்களைமட்டும் குறைகூறிப் பயனில்லை. பேராசிரியர்கள், பாப்புலர் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் பொதுஜன இலக்கிய ரசனையின்மையை வைத்து லாபம் பண்ணத் தயாராக இருக்கிறார்கள். இலக்கியப் பத்திரிகைகள் படிக்க இந்தக் காலநிலையில் 200—300 பேர்வழிகளாவது முன்வருகிறார்களே என்ற மகிழ்ச்சியடையலாம் என்று கூடத் தோன்றுகிறது.”

“இந்த எண்ணிக்கை அதிகரிக்க வழி என்ன என்பதுதான் எனக்குத் தெரியவில்லை” என்றும் க. நா. சு. குறிப்பிட்டிருக்கிறார். இன்று வரை இது யாருக்கும் தெரியவில்லைதான்! இலக்கியப் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், இலக்கியத்தின் வளர்ச்சியில் நாட்டமும் ஈடுபாடும் கொள்கிற இலக்கியவாதிகள் யாருக்குமேதான்!

என்றாலும், ‘தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தோடும், தமிழ் இலக்கியத்தை வளம் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும், பொதுவாகப் புதுமைகள் பண்ண வேண்டும்— தங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவ்வப்போது சிலர் சிறுபத்திரிகை