பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

வல்லிக்கண்ணன்


கட்டுரை, சி. வைத்திலிங்கத்தின் கதை கங்காகீதம் மற்றும் பலரின் படைப்புகள் ஆகியவற்றுடன் கே. ஏ. அப்பாஸ் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஒரு இரவுய என்ற சிறந்த சிறுகதையின் மொழிபெயர்ப்பும் இலக்கிய விருந்து ஆக அமைந்திருந்தன.

மலருக்குப் பின்னர், இலங்கையர்கோன் பத்திரிகையின் இறுதி இதழ்வரை கதைகளும் நாடகங்களும் எழுதி உதவி வந்தார்.

1944 நவம்பரில் திருலோக சீதாராம் 'கிராம ஊழியன்' தொடர்பை விட்டு விட்டு, திருச்சி சேர்ந்து, 'சிவாஜி' வார இதழின் ஆசிரியரானார். டிசம்பர் 1-ம் தேதி இதழிலிருந்து 'ஆசிரியர் : வல்லிக்கண்ணன்' என்று பெயர் அச்சிடப்பட்டது.

துணிச்சலான அபிப்பிராயங்கள், நேர்மையான புத்தக மதிப்புரைகள், ரசம் நிறைந்த புதுமைக் கதைகள், சர்ச்சையைக் கிளப்பிய கட்டுரைகள், இலக்கிய விவகாரங்கள், அருமையான உலகத்துச் சிறுகதைகள் ஊழியனில் இடம் பெற்று வந்தன. நாடகம், சினிமா பற்றிய சூடும் சுவையும் நிறைந்த விமர்சனங்கள் இதழ்தோறும் வெளியாயின. ஓரங்க நாடகங்களுக்கு ஊழியன் விசேஷ இடம் ஒதுக்கியிருந்தது. 'பாரதி அடிச்சுவட்டில்' என்ற தலைப்பில், பாரதியின் காட்சிகள் பாணியில் அமைந்த வசன கவிதைகளும் பிரசுரமாயின. நையாண்டி பாரதியின் கட்டுரைகளும் சொனா முனாவின் சிந்தனைகளும் கிராம ஊழியனின் விசேஷ அம்சங்களாக விளங்கின.

கொடுக்கப்பட்ட விஷயங்களில் சூடும் சுவையும், நயமும் புதுமையும், கனமும் வேகமும் இருந்தபோதிலும், கிராம ஊழியன் என்ற பெயர் அந்தப் பத்திரிகைக்குப் பாதகமாகவே செயல்பட்டது எப்போதும்.

'கிராம நலம்', 'கிராம ராஜ்யம்' போன்ற கிராம சீர்திருத்தம் பற்றிப் பேசக்கூடிய ஒரு பத்திரிகை என்ற எண்ணத்தையே 'கிராம ஊழியன்’ எனும் பெயரும் ஏற்படுத்தி வந்தது. இலக்கியப் பத்திரிகைக்கு 'கிராம ஊழியன்' என்ற பெயர் எடுப்பாகவுமில்லை; பொருத்தமாகவும் இல்லை என்பது பொதுவான அபிப்பிராயம். 'கிராம ஊழியன்' என்று பெயரை வைத்துக் கொண்டு, என்னென்ன விஷயங்களை எல்லாமோ போட்டுப் பத்திரிகையைப் பாழ்படுத்துவதாக ஒரு சாரார் குறைகூறிக் கொண்டிருந்தார்கள். -

பத்திரிகைக்குப் படைப்புகள் அனுப்பி ஒத்துழைக்க மனமில்லாது போன எழுத்தாளர்கள், ஒருவனே பலப்பல பெயர்களில் எழுதிப்