பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

வல்லிக்கண்ணன்


எல்லா மொழிகளிலும் வளர்ந்து மலர்ந்தது. நாவல்கள் வேகமாகப் பிறந்து கொண்டிருந்தன. -

இந்தத் தாக்கம் தமிழ்ப் பத்திரிகைகளிலும் காணப்பட்டது. ஓரங்க நாடகங்கள் பல்வேறு சுவைகளோடும் எழுதப்பட்டன. தமிழ்ப் பத்திரிகைகள் கதைகளை வரவேற்றன. சுயமாக எழுதப்படும் நாவல்களை ஆதரிப்பதற்குப் பதிலாக ஹிந்தி, வங்க நாவல்களின் தமிழாக்கத்தையே விரும்பிப் பிரகரித்தன.

1930 களிலும் 1940 களிலும் பிரேம்சந்த், பங்கிம் சந்திரர், தாகூர், சரத் சந்திரர் ஆகியோரது நாவல்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவும், புத்தக வெளியீடுகளாகவும் அதிகம் அதிகமாக வந்துள்ளன. பின்னர் தொடர்ந்து வி. ஸ். காண்டேகரின் மராத்தி நாவல்கள் வேகமாகத் தமிழில் இறக்குமதி செய்யப்பட்டன. ஒரு பத்து வருஷ காலம் காண்டேகர் ஸீசன் என்ற நிலை இங்கு நீடித்தது.

தமிழ் நாவல் படைப்பு வெகுகாலம் வரை சோனிக் குழந்தையாக இருந்ததற்கு நாட்டில் நிலவிய இந்த நிலைமையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும்.

விகடனும், அதைப் பின்பற்றிய ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் 'கல்கி' வழியில் செயலாற்றிய எழுத்தாளர்களும்-உலக இலக்கியங்களின் நல்ல கதைகளை நேரடி மொழிபெயர்ப்பாகக் கொடுப்பதை விரும்ப வில்லை. பிறநாட்டு நல்ல கதைகளைத் தழுவித் தமிழ்க்கதைகளாக வெளியிடுகிற போக்கே மிகுந்திருந்தது.

இலக்கியம் என்பது தொன்மையானவற்றைப் புகழ்ந்து விரிவுரை கூறிக் கொண்டிருப்பது மட்டுமல்ல, புதிய விஷயங்களைப் புதிய புதிய முறையில் எடுத்துக்கூறும் கவிதைகளும் கதைகளும் நாவல்களும் இலக்கியமாக முடியும் என்ற உணர்வு மொழி மறுமலர்ச்சியின் பயனாக வளர்ந்தது. ஆற்றல் நிறைந்தவர்கள் இவ்வகை எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

விற்பனையைப் பெருக்குவதில் தீவிர கவனம் செலுத்திய ஜனரஞ்சகப் பத்திரிகைகள் புதிய படைப்பு முயற்சிகளுக்கு ஆதரவு காட்டுவதில் ஒரு எல்லை வகுத்து, தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்துக் கொண்டு செயல்பட்டன.

1930 களின் ஆரம்பத்தில் தோன்றிய 'கலைமகள்' இலக்கியப் பத்திரிகையாகச் சில காலம் வளர்ந்தது. இது மணிக்கொடி மனோபாவ எழுத்தாளர்களையும், விகட மனோபாவ எழுத்தாளர்களையும் ஆதரிக்கும்