பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

63


பணம் அனுப்பி உதவுவதில்லை. அதனால் பத்திரிகையின் பொருளாதாரம் மேலும் அதிகம் பாதிக்கப்பட்டது.

இதனால்தான் உண்மையான சிறு பத்திரிகை, விற்பனையாளர்களை எதிர்பார்ப்பதில்லை. சந்தாதார்களையே தன்பலமாகக் கொள்ள விரும்புகிறது . 200 அல்லது 300 பிரதிகள் அச்சிட்டாலே போதும்; அதனால் அதிக லாபம் இல்லாவிட்டாலும் நஷ்டம் அதிகம் ஏற்படாது என்று கருதுகிறது.

இப்படி திட்டமிட்டுத்தான் சி. சு. செல்லப்பா விமர்சனத்துக்கென்று ஒரு பத்திரிகை ஆரம்பிக்கத் துணிந்தார். அவர் ஆரம்பித்த 'எழுத்து' தான், உண்மையான- அதன் முழு அர்த்தம் உடைய- முதலாவது சிறு பத்திரிகை ஆகும்.