பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

69


செல்லப்பாவின் இலக்கிய வேகமும், வைராக்கியமும், செயல்துணிவும் பிரமிக்கச் செய்பவை, போற்றுதலுக்கு உரியவை.

ஆயினும், 'எழுத்து' சோர்வுற்று வந்தது. 9¼ ஆண்டுகளுக்குப் பிறகு-பத்தாம் ஆண்டின் முதல் ஏடு (1968, ஏடு 112 )விலிருந்து 'எழுத்து' காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது.

அப்படியும் அது வெற்றிகரமாக வளர இயலவில்லை. ஒரு தனி மனிதனின் பிடிவாதமும் உழைப்பும் கருத்து ஆழமும் கனமும் கொண்ட இலக்கியப் பத்திரிகை’ யை நீடித்து வாழ வைக்கமுடியாமல் போயிற்று. பெரும் தொகை நஷ்டம்தான் எழுத்து ஆசிரியர் கண்ட பலன்.

பன்னிரண்டாம் ஆண்டில், 119 வது ஏட்டுடன் (1970 ஜனவரி-மார்ச்) ‘எழுத்து' நின்று விட்டது.