பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. கசடதபற


‘எழுத்து' என்பதே பத்திரிகை உலகில் புதுமையான பெயராக ஒலித்தது முதலில். போகப் போக அது பழகிவிட்டது.

பின்னர், 'எழுத்தோடு' தொடர்பு கொண்டிருந்த சில நண்பர்கள் தனி முயற்சி துவங்கிய போது, தங்கள் காலாண்டு ஏட்டுக்கு 'நடை’ என்று பெயர் சூட்டினார்கள்.

'நடை' யுடன் தொடர்பு கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்தபோது, அதற்கு முற்றிலும் புதுமையானபுரட்சிகரமான-ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தார்கள்.

‘கசடதபற’ - ஒரு வல்லின மாத ஏடு.

'கோபம் கொண்ட இளைஞர்கள்'

- வாளும் கேடயமும் ஏந்திய ஒரு போர் வீரனின் (இந்திய மரபு) ஓவியத்தைத் தங்கள் பத்திரிகையின் நிரந்தரச் சின்னமாகப் பொறித்திருந்தார்கள்.

அக்டோபர் 1970 -ல் பெரிய அளவில் ( க. நா. சு. நடத்திய இலக்கிய வட்டம் சைஸ் , 16 பக்கங்கள் கொண்ட ‘கசடதபற'வின் முதல் இதழ் வெளிவந்தது. விலை 30 காசு.

“இன்றைய படைப்புகளிலும், அவற்றைத் தாங்கி வருகிற பத்திரிகைகளிலும் தீவிர அதிருப்தியும் அதனால் கோபமும் உடைய பல இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திறனாய்வாளர்களின் பொது மேடைதான் கசடதபற ஊதிப் போன சுயகெளரவங்களாலும் பதுங்கிய பார்வைகளாலும் இவர்கள் பாதிக்கப்படாதவர்கள். அரசியல், சமயம், மரபு இவை சம்பந்தப்பட்ட ஒழுக்கங்களுக்கு வாரம் தவறாமல் தோப்புக்கரணம் போடுபவர்கள் யாரும் இவர்களில் இல்லை. இலக்கியத்தை அதுவாகவே பார்க்கத் தனித்தனியே தங்களுக்குப் பயிற்சி நிரம்பப் பெற்று பிறகு சேர்ந்து கொண்டவர்கள் இவர்கள். உலகின் இதர பகுதியின் இலக்கியத்தில் நிகழ்வனவற்றைக் கூர்ந்து கவனிப்பதிலும், தமிழ்ச் சிந்தனையில் புதிய கிளர்ச்சிகளை இனம் கண்டு கொள்வதிலும் இவர்கள் தேர்ந்தவர்கள். பல காலமாகவும், பலராலும் சொல்லப்-