பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

வல்லிக்கண்ணன்


வெளிப்பாடு, நவீன ஓவியம்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதினார். 7-வது இதழ் முடிய.

மற்றும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.

7-வது இதழிலிருந்து ஒவ்வொரு இதழை ஒவ்வொருவர் தயாரிக்கும் முறையை தேவ சித்திரபாரதி கைக்கொண்டார். 7-வது இதழ் ஞானக்கூத்தன் தயாரிப்பு, சைசும் பெரிதாகியிருந்தது-விகடன் அளவில் வெளிவந்தது.

8-வது இதழ்-வல்லிக்கண்ணன் தொகுத்தது. இது ரசனைக்கு விருந்தாகும் ஒரு சிறப்பு மலர்போல் அமைந்து, இலக்கியப் பிரியர்களுக்கு நிறைந்த திருப்தி அளித்தது.

9-வது இதழ் பரந்தாமன் தயாரிப்பு. இத்துடன் ஒரு வருஷம் முடிந்தது. ஞானரதம் என்ற இலக்கிய ஏடு சோர்ந்து தூங்கியது. தேவ. சித்திரபாரதி வேறு முயற்சிகளில் செயலூக்கம் கொண்டிருந்தார்.

1972 ஞானாதம் மாத இதழ் மீண்டும் தோன்றியது. இப்போது ஜெயகாந்தனுக்கும் பத்திரிகைக்கும் தொடர்பு ஏதுவும் இல்லை. தேவ. சித்திரபாரதிதான் ஆசிரியர், நிர்வாகி எல்லாம். இதழ்தோறும் ‘முன்னோட்டம் பகுதியில் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவர் தமது சிந்தனைகளை விரிவாக எழுதிக் கொண்டிருந்தார்.

பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் ஏற்று ஒரு ஆண்டுக் காலம் முடிந்ததும், அவர் டிசம்பர் 1972 இதழில் எழுதியது ரசமான குறிப்பு ஆகும்.

"தவறாமல் மாதந்தோறும் முதல் தேதியன்றே ஞானரதம் வெளிவந்திருப்பதே சாதனைகளின் சிகரமாகும். தமிழகத்தில் வெளியாகும் சிறு இலக்கியப் பத்திரிகைகளுள் தேதிப்படி சரியாக இந்த ஆண்டில் வெளிவந்த பத்திரிகை ஞானரதம் ஒன்றுதான் என்பதை அறியும்போது இந்தச் சாதனையின் பெருமை பூரிப்பைத் தரவே செய்கிறது.

ஜெயகாந்தன் பெயருக்காகத்தான் ஞானரதத்துக்கு இத்தனை வாசகர்கள் என்ற கணிப்பைப் பொய்யாக்கி, புத்தாண்டு சந்தா இயக்கக் கோரிக்கைக்கு, ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்த காலத்தையும் விட அதிக எண்ணிக்கையில் Respond பண்ணியதன் மூலம் வாசகர்கள்