சங்க இலக்கியங்களைச்.. டாக்டர் உ. வே.சா. 97 அரிதான ஏடுகளுங்கூட முறையாக அழிக்கப்பட்டு வந்த விதத்தையும் வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார். அவர் பழைய தமிழ்ச் சுவடிகளைத் தேடிச் சென்றபோது வரகுண பாண்டியர் வைத்திருந்த ஏடுகள் கரிவலம் வந்தநல்லூர் ஆலயத்தில் இருக்கின்றன என்று கேள்வியுற்று வினவியபோது, அறங் காவலர் குழுவைச் சேர்ந்த ஒருவர், பகுப்பை கூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக் கின்றேன். அந்தக் கூளங்களையெல்லாம் என்ன செய்வ தென்று யோசித்தார்கள். ஆகம சாத்திரத்தில் சொல்லி யிருக்கிறபடி செய்து விட்டார்கள்" என்று கூறினார். அதைக் கேட்டு ஐயருக்கு ஒன்றும் புரியவில்லையாம். "என்ன செய்து விட்டார்கள்" என்று பதற்றத்துடன் கேட்டாராம். "பழைய ஏடுகளைக் கண்டகண்ட இடங்களிலே போடக் கூடாதாம் அவற்றை நெய்யில் தோய்த்து ஹோமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்" என்றார் அவர். 'ஆ' என்று தம்மையும் மறந்து அலறினார் ஐயர். "குழி வெட்டி, அக்கினி வளர்த்து, நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்து விட் டார்கள்" என்றார் அவர். "இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படிச் சொல்லியிருந்தால் அந்த ஆகமத்தை அல்லவா முதலில் ஆகுதி செய்ய வேண்டும்!" என்று கோபம் கோபமாக வந்தது என்று ஐயரவர்கள் வேதனையை வெளியிடுகின்றார். ஆகமத்தின் பெயரால் வளர்ந்த அறியாமை நெய்க்கு மட்டுமேயன்றித் தமிழுக்கே அழிவை உண்டாக்கியதை இது காட்டும்."பழைய சுவடிகள் சிதிலமான நிலையில், அவற்றைப் புதிய படி எடுத்துக் கொண்டு பழையவற்றை ஆகுதி செய்வது வழக்கம். பிற்காலத்து மேதாவிகள், படி செய்வதை மறந்து விட்டுச் சுவடிகளைத் தீக்கு இரையாக்கும் பாதகச் செயலைச் செய் தார்கள். என்ன பேதைமை! இத்தகைய எண்ணத்தால்
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/118
Appearance