'மொழிநூல் 'கண்ட மூதறிஞர் 121 மணிய வைத்திய வெண்பாவிலும்; தென்னையை உணர்த்தும் "நாலி" என்பது போகர் நிகண்டிலும்; மூங்கில் நெல்லினை உணர்த்தும் 'ஞாங்கல்" என்பது மஞ்சிகன் ஐந்திசைச் சிறு நிகண்டிலும் உள்ளன. இவ்வாறு பழந்தமிழ்ச் சொற்கள் பல முன்னர் வழங்கிய காலத்து அவை குறித்துநின்ற பொருளையும் கண்டறிந்தே சொல்லொலி பிறப்பு ஆராய்ச்சி நிகழ்த்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழைத் தாழ்த்தி உரைப்பவர்க்கு அவர் இறுத்த விடையாக அமைவது இது : முன்னம் ஆரியத்தினின்றே தமிழ் பிறந்த தென்பர் பலர். நச்சினார்க்கினியர், வீட்டின் தன்மை தமிழால் கூறாரென்பர். அவரே காலம், உலகம் என்பன வடசொல் அன்றென்பர். ஈசான தேசிகர், 'அளவற்ற தமிழ்நூல்களுள் ஒன்றாயினும் தனித் தமிழ் நூல் ஆகுமா? தனதென ஐந்தெழுத்தே கொண்ட தொரு பாடையை ஒரு மொழி என்று பேசவும் புலவர்கள் நாணாரோ? என்று முழங்குவர். சுப்பிரமணிய தீட்சிதர் தொல்காப்பிய முதலியவற்றிற்கு முதனூல் பாணினீய மென்பர். சிவஞானமுனிவர் அதனைப் பலகாரணம் கூறி மறுத்துத் தமிழ் தனிமொழி என்பர். இது பலர் கோட்பாடு. ய பழமொழி, பழையவள், முது தமிழ், முதிய மாதமிழ் என்று (திருப்புகழில்) கூறப்படுதலானும் தமிழ் ஆரியத்திற்கு முற்பட்ட தெனல் வேண்டும். சேனாவரையர், தமிழ்ச் சொல் வடமொழிக்கண் செல்லா தென்பர். சத்த நூல் வல்ல ஐரோப்பிய பண்டிதர் தமிழ்ச் சொற்களுட் பல வடமொழியிலும் சில கிரேக்கு, எபிரேயம், முதலிய மொழிகளிலும் கலந்துள்ளன என்பர். கால்டுவெல் துரை, அக்கா, அடவி, ஆணி, குடி,கடுகு, மீனம்,வலை முதலிய பல தமிழ்ச் சொற்கள் வடமொழியிற் கலந்துள்ளன என்பர். மீனம்' என்பது பழைய வடமொழி நிகண்டுகளிலில்லை அது பிற்காலத்திலேற்பட்ட அமர நிகண்டிலுள்ளது.
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/142
Appearance