148 தமிழ்க்கடல் அலை ஓசை குறிப்பிட்டுள்ளதைக் காண்போர் அவரது உள்ளக்கிடக்கையை உணர்வர். அறநெஞ்சத்தையும் அதன் பயனாகிய தொண்டினையும் விவரித்திடும் வாயிலாக 'மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலை எழுதினார். இயற்கை அழகில் ஈடுபடும் உள்ளம், என்றும் அழியாத இறையழகை உணருமாற்றை விளக்கி முருகன் அல்லது. அழகு' என்னும் இலக்கியத்தைப் படைத்தார். நாயன்மார் திறம், சைவத்தின் சமரசம், கடவுள் மாட்சி யும் தாயுமானாரும், சைவத்திறவு, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், தமிழ்நாடும் நம்மாழ்வாரும், சித்தமார்க்கம், இமயமலை அல்லது தியானம் ஆகிய நூல்கள் யாவும் பொது நோக்குடன் பேரன்பு வயப்பட்டு, உள்ளொளி பெருக்கும் சமரச சன்மார்க்க அடி டிப்படையை விளக்கி உரைப்பனவாம். பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை நலம், சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து தமிழ்த்தென்றல் முதலானவை அறிவுப் புரட்சியை உருவாக்கிச் சமுதாயச் சீர்திருத்தம் விளையத் துணை செய்பவை. இப்படி வெளிவந்த நூல்கள் பலப்பல. அவை யாவும், தமிழ் அன்னையின் குறை தீர்ப்பன - அவலம் நீக்குவன. "எல்லாம் தமிழால் உணர்த்தலாம் - தமிழால் உரைக்க லாகாத அறிவும் துறையும் எதுவும் இல்லை" என்னும் தெளிவும் உறுதிப்பாடும் பிறக்கத்தக்க வகையில் அவரது நூல்கள் தமிழுக்கு ஆக்கஞ் செய்தன. தாமே சிந்தித்துப் புதிய புதிய எண்ணங்களை வெளியிடும் ஆற்றல் வளரவும் அவருடைய நூல்கள் துணைநிற்பன. திரு. வி. க. அவர்கள் தமிழின் மறுமலர்ச்சிக்கு வழி கண்டார். துறைகள்தோறும் தமிழ்ஆட்சி நிகழுதற்கு வித் திட்டார். தமிழைக் கற்றறியாதாரும் தமிழ்ப் பற்றுடையவ ராகுமாறு எழுச்சியூட்டினார். ஆம்! தமிழ்த்தென்றல் வீசிய
பக்கம்:தமிழ்க்கடல் அலை ஓசை.pdf/169
Appearance