பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

99 ஓசூர் (ஹோசூர்): தமிழ் நாட்டு எல்லையில் உள்ளது. இருப்பினும் கன்னட மொழி மாதிரியில் ஹோசூர் எனப்படுகிறது. இங்கே கோடைக் காலத் திலும் குளிர் மிகுதி. - பெண்ணாகரம்: இவ்வூர் வாரச் சந்தைக்குப் பெயர் பெற்ற இடமாகும்: * ஹொகெனகல் : இது தமிழ் நாட்டுப் பகுதியில் இருப்பினும் ஹொகெனகல் எனக் கன்னடப் பெயர் பெற்றுள்ளது. இந்த இடம் மேகதாட்டுக்கு 32 கி. மீ. தொலைவிலும் பெண்ணாகரத்திற்கு 15 கி. மீ. தொலைவிலும் உள்ளது. இங்கே காவிரி, கடல் மட்டத் திற்கு 780 அடி உயரத்திலிருந்து 86 அடி ஆழப் பள்ளத் தில் நீர் வீழ்ச்சியாகக் கொட்டுகிறது. ஹொகெனகல் என்றால் புகைக்கல் ஆகும். கல்லின்மேல் நீர்த்துளிகள் புகைபோல் கிளம்புகின்றன. மேட்டுர்: இங்கே தான் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற பெரிய மேட்டுர் அணை கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் முன்னர்த் தரப்பட்டுள்ளது. பின்னர்க் காவிரி ஒமலுார், திருச்செங்கோடு ஆகிய வட்டங்களில் புகுந்து இடைப்பாடி, சங்கரி துர்க்கம் முதலிய இடங்களைக் கடந்து பவானிக்கு வருகிறது. பவானி: திருநணா என்னும் வேறு பெயருடைய சைவப் பதியாகிய பவானி, கோவை மாவட்டத்தில் ஒர் உள் வட்டமாகும். இது குன்றுகள் நிறைந்த பகுதி. ஆற்று வளமும் மலைத் தொடர் வளமும் பெற்றது.