பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

102. (சமாதி) நகரை அடுத்தாற்போல் காவிரிக் கரையில் உள்ளது. இங்கே ஆண்டுதோறும் இசை விழா நடை பெறும். (நான் நான்காண்டுகள் படித்த) அரசர் கல்லூரி என்னும் கல்லூரி ஈண்டுள்ளது. தஞ்சாவூர் : தஞ்சை எனச் சுருக்கமாக வழங்கப் பெறும் இந்நகரம் தஞ்சை மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். காவிரியிலிருந்து பிரிந்த வெண்ணாற்றிற்கு அண்மையில் உள்ளது இது. (யான் பேராசிரியராகச் சிறிது காலம் பணியாற்றிய) தமிழ்ப் பல்கலைக் கழகம் இங்கே நடைபெறுகிறது. இது சோழர்களின் தலை நகரங்களுள் ஒன்று. சுவாமி மலை : கும்ப கோணத்திற்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் உள்ள இந்த ஊர் முருகன் திருப்பதியாகும். இதற்கு ஏரகம் என்ற பெயர் உண்டென்றும் முருகனுடைய ஆறுபடை வீடுகளுள் இஃது ஒன்று என்றும் ஒருவகைக் கருத்து கூறப்படுகிறது. - - 'கும்பகோணம் வட்டத் தலை நகராகிய இந் நகரம் கோயில்கட்குப் பெயர்போனது. குடந்தை, குட மூக்கு என்னும் தமிழ்ப் பெயர்களும்;இதற்கு உண்டு. பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மகாமகம் (மாமாங்கம்) என்னும் மாசிமகத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்: •r - மயிலாடுதுறை: இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத் தலைநகரின் பெயராகும். மயிலாடு துறை முன்னோர்களால் வழங்கப்பட்ட இந்தப் பெயர் பின்னர் மயூரம் ஆகவும் மாயவரம் ஆகவும் மருவிற்று. 'மீண்டும் முயன்று மயிலாடுதுறை என்னும் பழைய