பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

104 நாகப்பட்டினம் : இது சோழ நாட்டில் உள்ள ஒரு கடற்கரைப் பட்டினம்-துறைமுகமும் ஆகும். தஞ்சை மாவட்டத்தில் ஒரு வட்டத் தலைநகராயுள்ள இவ்வூர் சிறிது காலம் தஞ்சை மாவட்டத்தின் தலைநகராயிருந்த துண்டு: இதற்குத் திருநாகைக் காரோணம் என்னும் பெயரும் உண்டு. காரைக்கால் : புதுச்சேரி அரசின் ஒரு மாவட்டப் பகுதியாகும். இது முன்பு பிரெஞ்சுக்காரரால் அரசாளப் பட்டது. காரைக்கால் மாவட்டத்தின் தலைநகராக வுள்ள இவ்வூரில்தான் காரைக்கால் அம்மையார் தோன் றினார். அம்மையாரின் தொடர்பான மாங்கனி விழா இங்கே மிகவும் சிறப்பாக நடைபெறும். அரிசில் ஆற்றங் கரையில் உள்ள இது ஒரு துறைமுகமும் ஆகும். திருநள்ளாறு : புதுச்சேரி மாநிலத்துக் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டப் பெயராகும் இது. இங்கே சனியீசுவரன் கோயில் சிறப்பானது. ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியிலும் இங்கே மிகப்பெரிய விழா நடை பெறும். காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்னது. காவிரிப் பூம்பட்டினம் :- காவிரி கடலோடு கலக் கும் துறைமுகப் பட்டினமாயிருந்த இந்நகரம், இரண்டா யிரம் ஆண்டுகட்கு முன்-சங்க காலத்தில் சோழர்களின் தலைநகராயிருந்தது. காவிரி புகும்பட்டினம் என்றும் இதனைச் சிலர் கூறுவர். புகார் என்பது இதன் வேறு பெயராகும். பட்டினம் என்பது கடற்கரை ஊரைக் குறிக்கும், பண்டைக் காலத்தில் பட்டினம்’ என்றால் இந்த ஊரைக் குறிக்கும் அளவுக்கு இது சிறப்புப் பெற்றி ருந்தது. சங்க இலக்கியங்களில் இந்நகரம் மிகவும்