பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

106 மார்களின் தேவாரப் பாடலும் ஆழ்வார்களின் திவ்வியப் பிரபந்தப் பாடலும் பெற்ற ஊர்கள் மிகவும் சிறப்பு உடையன. பாடல் பெற்ற திருப்பதிகளின் வழியாக ஓடுவதால் ஆறுகளுக்கும் சிறப்பு உண்டு. காவிரி வடகரை — சோழநாடு : இப்போது, முதலில் சோழ நாட்டில், காவிரியின் வடகரையில் உள்ளனவும் தேவாரப் பாடல் பெற்றனவு மாகிய சைவத் திருப்பதிகளைத் தொகுத்துக் காண் பாம். நேரே காவிரிக் கரையில் இல்லாவிடினும், அதன் கிளையாறுகளுடன் தொடர்புடைய திருப்பதிகளும் இந்தப் பகுதியில் இடம் பெறும். அவையாவன : சைவத் திருப்பதிகள் - தில்லை, திருவேட்களம், திருமுல்லைவாயில், (இனி ஒவ்வோர் ஊர்ப் பெயருக்கும் முன்னால் திரு” என் பதைச் சேர்த்துப் படிக்கவும்), கழிப்பாலை, நல்லூர்ப் பெருமணம், மயேந்திரப் பள்ளி, தென் திருமுல்லை வாயில், கலிக்காமூர், சாய்க்காடு, காவிரிப்பூம்பட்டி னத்துப் பல்லவ னிச்சரம், வெண்காடு, கீழைத் திருக் காட்டுப் பள்ளி, கருகாவூர் வெள்ளண்ட, சீர்காழி, கோலக்கா, புள்ளிருக்கு வேளுர், கண்ணார் கோயில், கடைமுடி, நின்றியூர், புன்கூர், நீடூர், அன்னியூர், துருத்தி வேள்விக் குடி, எதிர்கொள்பாடி, மணஞ்சேரி, குறுக்கை வீரட்டம், கருப்பறியலூர், குரக்குக்கா, வாழ்' கொளி புத்துர், மண்ணிப் படிக்கரை, ஓமாம் புலியூர். கானாட்டு முள்ளுர், நாரையூர், கடம்பூர், பந்தணை நல்லூர், கஞ்சனூர், கோடிகா, மங்கலக் குடி, பனந் தாள், வாய்பாடி, சேய்ஞலூர், திருந்து தேவன் குடி, திருவியலூர், கொட்டையூர், இன்னம்பர், புறம்பயம், விசய மங்கை, வைகாவூர், வடகுரங்காடு துறை, பழனம், ஐயாறு, நெய்த்தானம், பெரும் புலியூர், மழ