பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

"உரோகிணி ஆற்றில் ஒடும் நீரைப் பயன்படுத் திக்கொளல் பற்றிப் பகைத்த சாக்கிய அரசும் சாரயல் நாட்டுக் கோலிய அரசும் கொடும்போர் புரிய, ஆற்று நீருடன் அளவிலாக் குருதியும் ஊற்றாய்ச் சேர ஓடியது வெள்ளம்; அறிந்த புத்தர் அன்னவர் இருவரும் நிறைந்த பகைகை நீங்கி ஒன்றிட ஆவன புரிந்தே அமைதி காத்தார்; மேவிடும் எல்லாம் மேலோர் முயலின்” காதை 26-அடிகள் : 180-189. மேலோர் முயன்றால் எல்லாம் ஒழுங்கு பெறும் என்பதாகப் பாடல் பகுதி முடிகிறது. புத்தரைப் போன்ற மேலோர் முயன்றால் காவிரி நீர்ப்பங்கீடும் ஒழுங்கு பெறும். அந்த மேலோர் யாரோ?-அல்லது அந்த மேலோர் குழு யாதோ? - அறிய முடியவில்லை. வழக்கமான நீரைத் தமிழகத்திற்குக் தந்துவிட வேண்டும்-என்று, 1924-1974-1988-முதலிய ஆண்டு களில் பேசித்தான் தீர்க்க வேண்டும் என்பது வேண்டா இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே இது தீர்க்கப்பட்ட முடிவு. தமிழ் நாட்டிற்கும் காவிரி ஆற்றுக்கும் உள்ள அழுத்தமான தொடர்புப் பிணிப்பு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் நூல்களில் பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. இடையிலே அதை மாற்ற எவருக்கும் உரிமை இல்லை-என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புகை வண்டியில் முதலில் ஏறியவர் பலகையில் படுக் கையை விரித்துப் படுத்துவிடின், பின்னால் வருபவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/11&oldid=1018884" இலிருந்து மீள்விக்கப்பட்டது