பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112 தாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில், குழு அளவில், திராவிட மொழியாகிய தமிழ்மொழியின் சார்புடையது இது என்று கூறலாம். இந்த மொழிக்குத் தனி எழுத்து இல்லையாதலின், கன்னட எழுத்துகளா லேயே இது எழுதப்படுகிறது. - நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர் மொழி குடகு போலவே தமிழோடு ஒத்த திராவிடமொழி) யாகும். தோடர் மொழிக்குத் தனி எழுத்து இல்ல்ை, அவர்கள் தம் மொழிக்குத் தனி எழுத்து உண்டாக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது போலக் குடகர் களும் ஒரு காலத்தில் குடகு மொழிக்குத் தனி எழுத்துத் தேவை என்பார்களோ- என்னவோ!