பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

121 தமிழும் கன்னடமும் தாய்-சேய் இல்லையெனினும் உடன்பிறப்பு என்பதை யாரும் மறுக்க முடியாது. சமசுகிருதத் தொடர்பு தென்னாட்டில் வேர் ஊன்று வதற்கு முன்பு தமிழும் கன்னடமும் மிகவும் நெருங்கிய வையா யிருந்தன. சமசுகிருத ஆட்சி மேலோங்கிய பின்பு கன்னடம் அம்மொழி எழுத்துகளையும் பெற்றுக் கொண்டு தமிழினின்றும் சிறிது சிறிதாக விலகத் தொடங்கி வேற்று மொழியாகி விட்டது. இங்கே 'ஹொகெனகல் என்னும் ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொள்வோம்: காவிரியாற்றின் இடையே 'ஹொகெனகல் என்னும் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளதன்றோ? கல் பாறையில் விழும் நீர்த் துளிகள் மேலெழுந்து புகைபோல் காணப்படுவ தால் இந்த நீர் வீழ்ச்சிக்கு இப்பெயர் ஏற்பட்டது என்பதும், ஹொகெ’ என்னும் கன்னடச் சொல்லுக்குத் தமிழில் புகை என்பது பொருள் என்பதும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. . கன்னட ஹொகெ’ என்பதும் தமிழ்ப் புகை' என்பதும் ஒரே சொல்லே யாகும். புகை என்பது தமிழின் எழுத்து வழக்கு; ஹொகெ என்பது தமிழின் பேச்சு வழக்கை ஒட்டியதாகும். இதற்கு உரிய விளக்கம் வருமாறு: தலை என்னும் தமிழ்ச் சொல், பேச்சுத் தமிழில் 'தலெ’ எனப்படுகிறது; இது கன்னடத்தில் தலெ’ என எழுத்து வழக்காக உள்ளது-என்பது முன்னரே கூறப் பட்டுள்ளது. எழுத்துத் தமிழில் தலை, மலை முதலிய சொற்களின் இறுதியில் உள்ள 'ஐ' என்பது, பேச்சுத் தமிழிலும் எழுத்துக் கன்னடத்திலும் தலெ, மலெ என "எ வாகத் திரிகிறது. இவ்வாறே, புகை என்னும் சொல் பேச்சுத் தமிழிலும் எழுத்துக் கன்னடத்திலும்