பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

j27 லிருந்து தான் தொடங்குகிறார்கள். அவர்கள் கொங் கணம், கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர் கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முது பெரும் வேளிர்களில் ஒருவரே கங்கர் எனச் சங்கஇலக்கியங்கள் தெளிவாக கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் "நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கன் கட்டி’ (அகம்-44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக் கிறான்? கொங்காணம் என்னும் பகுதியின் தலைவன் நன்னன் என்றும் அவன் தமிழ்க்குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப் பிறகு கொங்காணத்தைத் தம தாக்கிக் கொண்டு படிப்படியாக, பெங்களுர், தலைக் காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே தொடர்பு கொண்டிருந்தனர். சோழ அரசுடனும் பல்லவ அரசுடனும் இணை பிரியா நட்பு பூண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்கும் பல்லவ அரசர்கள் முடிசூட்டியுள்ளார்கள். கன்னடமும் சம்ஸ்கிருதமும் தமிழ்ப் பெரு மன்னர்களான சேர மன்னர்களே சங்க காலத்திற்குப் பின்னர் மேலைக் கடற்கரைப் பகுதியிலே தங்கி, அங்கு மலர்ந்த மொழியால் மலையாள் அரசர்களாகி விட்டது போன்று, தமிழ் மன்னர்களான கங்கர்கள் கொங்கணப் பகுதியில் ஆட்சி புரியத். தொடங்கி, கி.பி. 5-ம் நூற்றாண்டில் அங்குத் தனித் தன்மை வாய்ந்ததாகக் கன்னட மொழி வளர, மக்கள் மொழியான கன்னடத்தையும் சம்ஸ்கிருதத்தையும் பயன்படுத்தினர். இருப்பினும் இவர்கள் தமிழையும்