பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128 விட்டுவிடவில்லை. இவர்களது பல கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. கி. பி. 3, 4-ம் நூற்றாண்டுகளில் பழைய கன்னடத்திற்கும் தமிழுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பது ஆராய்ச்சியாளர் அறிந்ததே. அப்பகுதியில் பெரு மன்னர்களாக மலர்ந்த இம் மன்னர்கள், தாங்கள் புதிதாக ஆட்சிக்கு வந்தவர்கள் அல்லர் மிகவும் தென்மையான குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் தம்மை முதுகுடி முத்தரையர் (விருத்த ராஜா) என்று அழைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். ஆதலின் கங்கர் முத்தரை யர் என்றும், தமிழ் முது பெரும் வேளிர் வழி வந்தவர் என்றும் தமிழ் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும் அறிகிறோம்’ இதுதான், கல்வெட்டு ஆராய்ச்சி மேதை உயர் திரு இரா. நாகசாமி யவர்கள் தினமணி நாளிதழில் எழுதிய பகுதியாகும். (கட்டுரையில் இதற்கும் முன்னால் ஒரு சிறு பகுதி உள்ளது. அது தேவையில்லை என விடப் பட்டது). கங்கனைத் தோல்வியுறச் செய்த சோழ வேந்தன் பெரும் பூட் சென்னி என்பவன். கங்கர் பற்றிச் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது : 'கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாட்ர் பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர்”-25-156, 157 என்பது சிலம்புப் பகுதி. அடுத்து, நன்னன் என்பவன் சங்க இலக்கியங்கள் பலவற்றில் பல பாடல்களில் குறிப் பிடப்பட்டுள்ளான். விரிப்பின் பெருகும். நன்னன் குடி