பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129 யினர் வேளிர்கள் என்பதை அகநானூற்றுப் பாடல் பகுதிகளால் அறியலாம்: - 'நறவு மகிழ் இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர்’-அகம்-97-2, 13. வேண்மான் என்பது வேளிர் குடியைக் குறிக்கும். "நன்னன் உதியன் இருங்கடிப் பாழித் தொன்முதிர் வேளிர் ஒம்பினர் வைத்த '-258-1,2 இது நன்னன் உதியன் என்பவனைப் பற்றியது. இவன் வேளிர் குடியினன் என்பதைப் பாடலால் அறியலாம். இது காறும் கூறியவற்றால், தமிழரும் கன்னடியரும் ஒரு குடும்பத்தினர் என்பது பெறப்படும். எனவே . கன்னடியர் தமிழ் நாட்டுக்குத் தண்ணிர் விடுவது, தம் குடும்பத்திற்குச் செய்யும்ஆக்கம் போன்றதேயாகும் அல்லவா? தமிழர் - கன்னடியர் இடையே உதவி ஒத்துழைப்பு - ஒற்றுமை மேன்மேலும் ஓங்கி வளர்கவாழ்க.