பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 மிசி சிப்பி, நைல், (ஆப்பிரிக்கா), அமேசான் (தென் அமெரிக்கா), எலிசி (சைபீரியா), காங்கோ (ஆபிரிக்கா), மெக்கன்சி (கானடா), வால்கா (ஐரோப்பா), பரானா (அர்சன்டைனா), கொலராடோ (வட அமெரிக்கா), பிரம்மபுத்திரா (இந்தியா), கங்கை இந்தியா) முதலிய ஆறுகளைப் போல், காவிரி ஆயிரக்கணக்கான கல் (மைல்) தொலைவு நீண்டிருக்கவில்லை. இந்திய ஆறுகளுக்குள் நோக்கினாலும், காவிரி எட்டாம் இடத்தையே பெறுகிறது. இதனினும் நீள மான ஏழு ஆறுகளாவன :- பிரம்மபுத்திரா, கங்கை, சிந்து. மகாநதி, நர்மதை, கோதாவிரி, கிருஷ்ணா ஆகியவையாகும். தமிழ் நாட்டிற்குள் ஒடும் ஆறுகளுக்குள் வேண்டு மானால் காவிரிக்கு முதன்மை கொடுக்கவியலும். நீளத்தில்: கெடிலம்-112 கி.மீ. பொருநை-120 கி.மீ.; கொள்ளிடம்-147 கி.மீ. வைகை-264 கி.மீ.; பாலாறு368 கி.மீ. தென்பெண்ணை-400 கி.மீ.; காவிரி-758 கி.மீ.தொலைவாகும். உலக ஆறுகளுள் காவிரியின் நிலைமை இது. தான் தோன்றி முடியும் இடத்திற்கேற்பக் காவிரியின் நீளம் பல ஆறுகளினும் குறைவாயிருப்பினும், அதற்குக் கோயில் பெருமை, தெய்வ நீராடல் பெருமை, ஊர்ப் பெருமை, பெரும்க்கள் பெருமை, கல்வி-கலைப் பெருமை, அரசாட்சிப் பெருமை, தலைநகர்ப் பெருமை, துறைமுகப் பெருமை, நீண்ட கால - வரலாற்றுப் பெருமை, உயரிய பண்பாட்டுப் பெருமை முதலிய பெருமைகள் பலவும் உண்டு. இவை பின்வரும் பல்வேறு தலைப்பின் கீழ்த் தரப்பெறும் விளக்கங்களால் புலனாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/15&oldid=1018890" இலிருந்து மீள்விக்கப்பட்டது