பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

3. காவிரியின் புராண வரலா w காவிரி ஆறு ஒரு பெண் நான்முகன் திருவருளால் கவேரன் என்னும் மன்னனின் மகளாய்க் காவிரி பிறந் தாள். கவேரன் மகள் ஆதலின் காவேரி என்னும் பெயர் ஏற்பட்டது. இவள் அகத்தியரை மணந்து கொண்டாள். அகத்தியரின் மனைவியாகிய உலோபாமுத் திரை என்பவள் இவளே. அகத்தியன் காவிரியைத் தண்ணி ராக்கித் தன் செப்பிற்குள் (கமண்டலத்திற்குள்) அடக்கி வைத்திருந்தான். தமிழ் நாட்டின் மேற்கேயுள்ள குடகு மலையில் அவன் கமண்டலத்தைப் பக்கத்திலே வைத்து விட்டுத் தவம் செய்து கொண்டிருந்தான். இங்கு இங்ங்னம் இருக்க - இந்திரன் அசுரர்க்கு அஞ்சிச் சீர்காழியில் ஒளிந்து கொண்டிருந்தான். அங்கே இறைவனை வழிபடுவதற்கு மலர் வேண்டி ஒரு பூந்தோட்டம் அமைத் தான். ஆனால் அதை வளர்க்கப் போதிய தண்ணிர் வசதி கிடைக்கவில்லை. எனவே, நீருக்கு ஏற்பாடு செய்யும் படி விநாயகரை வேண்டினான். அதனால் விநாயகர், காக்கை உருவங்கொண்டு அகத்தியன் இருந்த பக்கம் போய், அவனது கமண்டலத்தைக் கவிழ்த்து விட்டார். கமண்டலத்து நீர் ஆறாகப் பெருகித் தமிழ்நாடுவரையும் வந்து பல கால்களாய்ப் பிரிந்து பல இடங்கட்கும் நீர் வசதி செய்கிறது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/16&oldid=1018891" இலிருந்து மீள்விக்கப்பட்டது