பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

17 என்பது பாடல் பகுதி, கவேரன் மகள் காவிரி என்னும் குறிப்பு மணிமேகலையிலும் உள்ளது :- * . . 'தவா நீர்க் காவிரிப் பாவைதன் தந்தை . ஆங்கிருந்த கவேரன் கவேர வனமும்” (3-55, 56) என்னும் பாடல் பகுதியால், காவிரிப் பூம்பட்டினத்தில் கவேரன் இருந்தான் என்பதும், அவன் பெயரால் கவேரவனம் என ஒன்று இருந்தது என்பது புலனாகும். - அதே மணிமேகலையில் ஊரின் பெயர்க்காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. - 'கவேர கன்னிப் பெயரோடு விளங்கிய தவாக் களி முதுார்” - (9-52, 53) கவேர கன்னி என்பது காவிரி. அவள் பெயரால் அந்த ஊருக்குக் காவிரிப்பூம்பட்டினம் என்னும் பெயர் வழங்கப் பெற்றது. காவிரி கடலில் புகும் இடம் ஆதலின், காவிரி புகும் பட்டினம் என முதலில் இருந்த பெயரே, பின் காவிரிப்பூம்பட்டினம் எனப்பட்டது என்றும் கூறுவர். - கவேரன் என்னும் முனிவர் நான்முகனை நோக்கித் தவம் செய்து விஷ்ணு மாயை என்னும் கன்னியை மணந்து கொண்டதாகவும், பின் அப்பெண் நான்முகன் கட்டளைப்படி ஆறு உருவு கொண்டு கவ்ேர கன்னி என்றும் காவேரி என்றும் பெயர் பெற்றதாகவும் ஆக்கினேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மற்றும் ஒரு செய்தி ஆக்கினேய புராணத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. குடகுநாட்டில் உள்ள சைய மலையில் நான்முகன் திருமாலை நோக்கித் தவம் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/19&oldid=1018894" இலிருந்து மீள்விக்கப்பட்டது