பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

19 நோன்பு செய்தானாம். இறைவன் கனவில் தோன்றி அணை கட்டினால் பின்னர் அளவாகத் தண்ணிர் வரச் செய்கிறேன் என்று தெரிவித்தாராம். காவேரிப் பெண் ணும் கனவில் அவ்வாறு கூறினாளாம். இதன்படி இவன் அணை கட்டினானாம். இது ஒரு கதை. இங்கே செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் உள்ள ஒரு குறிப்பு கவனிக்கத்தக்கது. சோழன் ஒருவன் காவிரியைக் கொண்டு வந்ததாக ஒரு செய்தி இந்நூலில் சுட்டப்பட்டுள்ளது. - - * “காலனுக்கு இது வழக்கென உரைத்த அவனும் காவிரிப் புனல் கொணர்ந்த அவனும்...” 192 என்பது பாடல் பகுதி. இந்திரனுக்காகக் கமண்டலம் கவிழ்க்கப்பட்டுக் காவிரி வந்ததாகவும், காந்தன் என் னும் மன்னனுக்காக அவ்வாறு வந்ததெனவும் முன்னர்க் கண்டோம். இன்னொரு கதையும் இது தொடாபாகச் சொல்லப்படுகிறது. காவிரி ஹொகெனகல் நீர்வீழ்ச்சி யாய்க் கீழே விழுந்ததும் ஒரு பெரிய பள்ளத்தாக்கில் மறைந்து விட்டதாம், பிறகு வெளிப்படவில்லையாம். நீதிவழுவா மன்னன் ஒருவன் தன் உயிரைக் கொடுத்தால் மீண்டும் காவிரி வெளிப்படும் என்று அறிவிக்கப்பட்ட தாம். அதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன் தன் உயிரைத் தந்து காவிரியை வெளிக் கொணர்ந்து தொடர்ந்து ஒடச் செய்தானாம். இதுதான் சோழன் காவிரி கொண்டு வந்த ஒரு புது வரலாறு. இதுகாறும் கூறியவற்றால், காவிரிக்கும் தமிழ்நாட் டிற்கும், காவிரிக்கும் சோழ மன்னர்கட்கும் இடையே இருந்த தொடர்பு அறிய வரலாம். * ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/21&oldid=1018896" இலிருந்து மீள்விக்கப்பட்டது