பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

21 கண்ணம்பாடி என்னும் இடத்தில் காவிரியின் குறுக்கே ஒரு பெரிய அணை கட்டப்பட்டுள்ளது. மைசூரை யாண்ட கிருஷ்ணராசர் என்னும் மன்னரின் முயற்சியால் இது உருவானதால், இந்த அணையின் நீர்ப்பகுதி கிருஷ்ணராச சாகரம்’ என வழங்கப்படு கிறது. சாகரம் என்றால் கடல். கடல் போன்ற பரப் புடைய இந்த நீர்த் தேக்கத்தின் நீளம் 8,600 அடியாகும். உயரம் 134 அடியாகும்; பரப்பவவு 80 சதுர கி.மீ. ஆகும், மைசூர் நாடாகிய கர்நாடகத்தில் பன்னிரண்டு அணை கள் உள்ளன.அவற்றுள் கண்ணம்பாடி அணையே மிகவும் பெரியது. இத்தேக்கத்தில் 48,355 மில்லியன் கனஅடிநீர் தேங்க வாய்ப்புள்ளது. இது, 1932-ஆம் ஆண்டில் 2.6 கோடி உரூபா செலவில் அமைக்கப்படடது. மூன்று இலட்சம் ஏக்கருக்கு நீர்ப்பாசன வசதி செய்ய வல்லது. இந்தத் தேக்கத்திலிருந்து மின்சாரம் உண்டாக்கப்படு கிறது. காவிரி கெளதம ஆசிரமம் என்னும் இடத்தை அடைந்ததும் இரண்டாகப் பிரிந்து 13 கி.மீ. தொலைவு சென்றதும் மீண்டும் ஒன்றாகக் கூடுகிறது. இந்த இடைப்பட்ட இடத்தில்தான் சீரங்கப்பட்டனம் என் னும் புகழ்பெற்ற ஊர் உள்ளது. அரங்கம் என்றால் ஆற்றிடைக் குறை. காவிரியின் முதல் அரங்கம் இந்தப் பகுதிதான். காவிரி தழைக்காடு என்னும் இடத்தைத் தாண்டிய தும் சிவசமுத்திரம் என்னும் இடத்தில் மீண்டும் இரண் டாகப் பிரிகிறது. பிரிந்த இரண்டு அருவிகளும் (சுமார்) 300 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாகக் கொட்டு கின்றன. மேற்குப் பக்க அருவிக்குக் ககனசுக்கி’ என்பதும் கிழக்குப் பக்க அருவிக்குப் பருசுக்கி’ என்பதும் பெயர் த -2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/23&oldid=1018898" இலிருந்து மீள்விக்கப்பட்டது