பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22 களாகும். இந்த இடைப்பட்ட இடம் காவிரியின் இரண் டாவது அரங்கமாகும். இங்கே காவிரி வடக்குத் தெற் காகப் பாய்ந்தோடுகிறது. - இந்த இடத்தைத் தாண்டியதும் இரண்டு மலைச் சரிவுகளுக்கிடையே பன்னிரண்டு அடி குறுக்களவு உடை யதாய்க் காவிரி சிறிய உருவத்தில் காணப்படுகிறது. இந்த இடத்தில் காவிரியை ஒர் ஆடு கூடத் தாண்டிவிடும் என்னும் பெயரில் மேகதாட்டு என்னும் பெயர் பெறு கிறது காவிரி. கன்னடத்தில் மேக என்றால் ஆடு , தாட்டு என்பது தாண்டுதல் ஆகும். மேகதாட்டுக் காவிரி பின்னர்க் கொங்குநாடு அடை கிறது ; சேலம், கோவை, ஈரோடு மாவட்டங்களின் எல்லையாகப் பாய்கிறது. இப்பகுதியில் பல ஆறுகள் வந்து காவிரியுடன் கலக்கின்றன. இங்கே ஒரு நீர் வீழ்ச்சி உள்ளது. இது ஹொகெனகல் நீர் வீழ்ச்சி எனப்படுகிறது. கன்னடத்தில் ஹொகெ’ என்பதற்குப் புகை என்பது பொருள். கல்பாறையில் விழும் நீரின் துளிகள் புகைபோல் மேலெழுந்து காணப்படுவதால் இப் பெயர் வழங்கப்பட்டது. - - - பின்னர் ஓமலூர். திருச்செங்கோடு ஆகிய வட்டங் களில், வடக்குத் தெற்காக, சீதாமலை - பாலமலை என்னும் இரண்டு மலைகட்கிடையில் காவிரி ஒடுகிறது, மேட்டுருக்கு அண்மையில் அவ்விரண்டு மலைகளும் குறுகி வருகின்றன. அந்த இடத்தில்தான் மேட்டுர் அணை' கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு : இது 176 அடி உயரமுள்ளது. 6.8 கோடி உரூபா செலவில் 1934-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/24&oldid=1018900" இலிருந்து மீள்விக்கப்பட்டது