பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

23 மூன்று இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய் கிறது. நீர் அளிப்பதன்றி, மின்சாரம் உண்டாக்கவும் வாய்ப்பாக இருந்து வருகிறது. இதன் நீளம் 5,300 அடி. நீர் கொள்ளளவு 9350 கோடி கன அடியாகும். இதன் பினன்ர்ப் பவானி நகர்ப்பக்கம் வந்ததும் காவிரியுடன் பவானி ஆறு கலக்கிறது. பின்னர் ஈரோட் டையடுத்து நொய்யல் ஆறும் திருமணி முத்தாறும் கலக்கின்றன. தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் புக் கதும் கரூர் மருங்கில் அமராவதி ஆறு சேர்கிறது. அடுத் துத் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 14 கி.மீ. தொலைவில் உள்ள இலமனுார் என்னும் இடத்தில் காவிரியிலிருந்து கொள்ளிடம் என்னும் ஆறு பெரிய அளவில் பிரிகிறது. கொள்ளிடம் பிரிவதற்கு முன் உள்ள காவிரிப் பகுதி "அகண்ட காவிரி என வழங்கப்படுகிறது. கண்டம் என்றால் பிரிவு: அகண்டம் என்றால் பிரியாததுஎன்பது பொருளாம். இங்கே காவிரியின் அகலம் ஏறக் குறைய ஒன்றரை கி. மீ. (ஒருமைல்) தொலைவு ஆகும். சோழ நாட்டில் காவிரி மேற்கு கிழக்காக ஒடுகிறது. பிரிந்த நிலையில், காவிரி தென் கிளையாயும் கொள்ளிடம் வட கிளையாயும் உள்ளன. பிரிந்த இடத்திலிருந்து 27 கி.மீ. தொலைவு சென்றதும் காவிரியையும் கொள்ளிடத்தையும் உள்ளாறு என்னும் ஒரு சிற்றாறு இணைக்கிறது. இந்த உள்ளாற்றின் குறுக்கே ஒர் அணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையிலுள்ள பகுதி காவிரியின் மூன்றாவது அரங்க மாகும். இங்கேதான் திருவரங்கம் (பூரீரங்கம்) உள்ளது. கிழக்கே வர வரக் காவிரியிலிருந்து பல ஆறுகள் பிரிகின்றன. அவை: வெண்ணாறு, வெட்டாறு, குட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/25&oldid=1018902" இலிருந்து மீள்விக்கப்பட்டது