பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 முருட்டி, வடவாறு, அரிசிலாறு, வீரசோழனாறு, பாமணியாறு, திருமலை ராசனாறு-இன்ன பிறவாம். திருவையாறு (திரு.ஐயாறு) என்னும் நகரத்தை, அடுத்தேற் போல், வெண்ணாறு, வெட்டாறு, குட முருட்டி, காவிரி, கொள்ளிடம் என்னும் ஐந்து ஆறுகள் பாய்வதால், அந்நகரம் திருவையாறு என்னும் பெயர் பெற்றது. உடம்பு முழுவதும் குருதிக் குழல்கள் (இரத்தக் குழாய்கள்) ஒடுவதைப் போல், சோழநாடு முழுவதும் காவிரியிலிருந்தும் அதன் கிளையாறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான கால்வாய்கள் பிரிந்துஓடி, மிக்க விளைவைத் தந்து, சோழநாட்டை வளநாடு’ என்னும் பெயருக்கும் 'சோழ வளநாடு சோறுடைத்து' என்னும் சிறப்பிற்கும் உரியதாக்கிக் கொண்டுள்ளன். காவிரி கால்களால் (கால்வாய்களால் வளப்படுத்து வதைக் கலிங்கத்துப் பரணி பின்வருமாறு கூறுகிறது. 'காலால் தண்டலை உழக்கும் - காவிரியின் கரை மருங்கு" 278 பல இளைக் கால்வாய்கள் பிரியப் பிரியக் காவிரி குறுக்களவில் மிகவும் சிறுத்து விட்டது. மயிலாடுதுறைக் குக் கிழக்கே செல்லச் செல்ல ஆடுதாண்டும் காவிரியாகி விட்டது. இங்கெல்லாம் காவிரியின் குறுக்கே மூங்கில் பாலம் அமைத்து மக்கள் கடந்து செல்கிறார்கள். இவ் வாறு உயிர்ப்பு ஆறாக (சீவநதி) ஓடிவரும் காவிரி, தரங்கம் பாடிக்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. இந்த இடத்திலேதான் மிகவும் புகழ் பெற்ற காவிரிப்பூம் பட்டினம் என்னும் சோழர் தலை நகரம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/26&oldid=1018903" இலிருந்து மீள்விக்கப்பட்டது