பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 கல்லூரியில் நான்காண்டுகள் படித்தவன் நான். பொன் துகள் போல் மின்னுவதைக் கண்டு யான் வியப்படைவ துண்டு. இந்தக் காட்சியைப் பாரதிதாசனார், " பொன் விளைந் தாற்போலும் நறுப் பொடி விரிந்த. காவிரி என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்குப் பொன் கொழித்து வளமளிக்கும் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயரைப் புலவர்கள் பலர் தத்தம் நூல்களில் நிரம்ப வழங்கியுள்ளனர். அவற்றுள் ஒரு சில வருமாறு: சேந்தன் திவாகரம் - இடப்பெயர்த் தொகுதியில் 'பொன்னி காவிரி (50) எனக் காவிரிக்குப் பொன்னி என்னும் பெயர் உண்மை அறிவிக்கப்பட்டுள்ளது. "திருவரங்கத்துப் பெருநகரில் தெண்ணிர்ப்பொன்னி திரைக்கையால் அடிவருடிப் பள்ளி கொள்ளும் கருமணி', குலசேகர ஆழ்வார் - திவ்வியப் பிரபந்தம்-பெருமாள் திருமொழி-1-1. பொன்னி சூழ்திருவரங்கா’-தொண்டரடிப்பொடி’ யாழ்வார்-திவ்வியப் பிரபந்தம் (901) 'வளவர் பொன்னி வளந்தரு நாடு’-சம்பந்தர் தேவாரம் "செண்டாடு புனல் பொன்னிச் செழுமனிகள் வந்தலைக்கும் திருவையாறே’-சம்பந்தர்தேவாரம் “வரைவந்த சந்தோ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பொன்னி வடபால் - சம்-தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/30&oldid=1018908" இலிருந்து மீள்விக்கப்பட்டது