பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

6. பொய்யாத - வற்றாத காவிரி இத்தக் காலத்தில் காவிரியாற்றில் தண்ணீர் கிடைக் ಹಣ!urು தமிழ்நாட்டு உழவர்கள் - தமிழ் நாட்டு முக்கள் - தமிழ் நாடு அரசு வருந்துவது கண் கூடு. இதற்காகக் கருநாடக அரசிடம் தமிழ்நாடு இரந்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருப்பதும் அன்றாட நாளிதழ்ச் செய்தியாகும். ஆனால், இதே காவிரி, பண்டைக்-காலம் முதல் அண்மைக் காலம் வரை பொய்க்காமல், வற்றாமல் - ஆப்பாமல்-பிழையாமல்-ஒழியாமல்நிலை திரியாமல் - தொடர்ந்து நீர்வளம் தந்து வந்துள்ளது - என்பதற்கு நிரம்ப இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவற்றுள் -சில வருமாறு :- - - சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய புறநானூற்றுப் LIITL–6i) : – "அலங்கு கதிர் கனலி நால்வயின் தோன்றினும் இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்து கவர் பூட்டத் தோடு கொள் வேலின் தோற்றம் போல ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும் நாடெனப் படுவது நினதே" - (35)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/34&oldid=1018916" இலிருந்து மீள்விக்கப்பட்டது