பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 இங்கே வான அறிவியல் கருத்து ஒன்று நினைவிற்கு வருகிறது:- மாப்பேருலகாகிய பிரபஞ்சத்தை (Uni -verse) ஆராயும் துறைக்கு ஆங்கிலத்தில் (Cosmology) என்னும் பெயர் வழங்கப்படுகிறது. Cosmos என்றால் ஒழுங்கு அமைப்பு என்று பொருளாம். உலகம் ஒழுங்கு அமைவுக்கு உட்பட்டிருத்தலின், Cosmos என்னும் சொல் உலகைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. உலகம் ஒழுங்கு அமைவுக்கு உட்பட்ட தென்றால் என்ன? நாம் வாழும் பூவுலகம் முதல் எல்லாக் கோள்க ளும் எப்போதும் ஒரே மாதிரியாய் இயங்கிக் கொண் டிருப்பதுதான் அது. இதில் மாற்றம் நிகழாது. அப்படி மாற்றம் நிகழ்வதென்றால் எத்தனையோ ஆண்டுகட்கு ஒரு முறை மாற்றம் ஏற்படலாம். அப்படி ஏற்படினும், அம்மாற்றம் பல்லாயிரம் ஆண்டுகட்கு அப்படியே இருக்கும். எனவே கோள்கள் மாறா என்ற கொள்கை யுடனேயே, புலவர்கள். கோள்கள் மாறினும் காவிரி நீர் தருவதில் மாறாது என்று கூறினர். மேற்கூறிய பாடல்களின்றி, இன்னும் பல நூல் பாடல்களில் தப்பாது காவிரி தண்ணீர் தரும் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றை யும் காண்போம். “பொய்யா மரபின் பூமலி பெருந்துறை...... மாஅ காவிரி மணம் கூட்டும்” (பட்டினபாலை:105-116) பொய்க்காமல் நீர்நிறைந்த துறைகளையுடைய காவிரிகருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/38&oldid=1018923" இலிருந்து மீள்விக்கப்பட்டது