பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

37 'வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் - தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் - உயிரோம்பும் ஆழியாள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி’ (சிலம்பு-7-கானல் வரி-27) உலகம் அழியும் ஊழிக் காலம் வரை ஒழியாமல்தவறாமல் காவிரி நீர் தந்து காக்கும்- கருத்து. "தெய்வக் காவிரி தீது தீர் சிறப்பும் பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்’ (சிலம்பு-10-கட்டுரை-8,9) வானம் பொய்க்காமல் புது நீர் பொழியப் பெற்றுச் சிறப்பு அடையும் காவிரி - கருத்து. "செல்லல் காலையும் காவிரி புரக்கும் நாடு கிழவோன்” - (சிலம்பு - 27 - 170, 171) எத்தகைய துன்பக்காலத்தி லும் காவிரி நீர் தந்து காக்கும் - கருத்து. "தவா நீர்க் காவிரிப் பாவை’-மணிமேகலை - 3 - 55 நீங்காமல் நிற்காமல் நீர்தரும் காவிரிப் பெண் - கருத்து. "ஏங்கா முகில் பொழியா நாளும் புனல் தேங்கும் பூங்கா விரி நாடான்” - (முத்தொள்ளாயிரம் - 80) த-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/39&oldid=1018924" இலிருந்து மீள்விக்கப்பட்டது