பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

39 ಕ್ಲೆಮ್ಡ್ರಿಲ್ಲ யல்லீர் முன்னாள் நிலமுழு தாண்டநேமி நாவிரி கீர்த்தி யாளன் நளனெனும் நாம வேந்தன் காவிரி என்னத் தப்பாக் கருணையான் குதில் . . . . - தோற்றுத் : தீவிரி கானம் சென்ற காதை நும் செவிப்படாதோ? இந்தப் பாடலில், குதில் தோற்று விட்ட மன்னன் நளின், காவிரி ஆறுபோல் தப்பாமல் பலர்க்கும் வழங்கும் அருள் உடையவன் - எனப் பாராட்டப் பட்டுள்ளான். அடுத்துப் பாவேந்தர் பாரதிதாசரது பாடல் பகுதி ஒன்று வருக; "புகுந்து மொழிப் பேச் செல்லாம் பொன்னியாற்றுப் புனல் போலத் தொடர்வதுண்டாம் அன்னார் - பாட்டில்’ - பொன்னியாம் காவிரி யாற்று நீர் தொடர்ந்து பாயும் என்னும் குறிப்பு இப்பாடல் பகுதியில் அமைந் துள்ளது. அடுத்துக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை யின் இரண்டு பாடல் பகுதிகளைப் பார்க்கலாம்: 'கங்கை யமுனை காவிரி முதலிய வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும் - "வற்றலில் கங்கை காவேரி வளஞ் செய் பரத நாட்டினிலே - (மலரும் மாலையும்) கங்கையைப் போலவே காவிரியும் வற்றாதது என்னும் கருத்து இப்பாடல் பகுதிகளால் அறிய வரு கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/41&oldid=1018926" இலிருந்து மீள்விக்கப்பட்டது