பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

42

42 பெறாஅக் காவிரி நீத்தம்'எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கழை = மூங்கில் கோல். நீத்தம்-மிக்க வெள்ளம். ஆழ மான வெள்ள நீரில் மூங்கில் கோல் நிலைபெற முடிய வில்லையாம். 'மழை மருள் பாஃறோல் மாவண் சோழர் கழை மாய் காவிரி”-அகநானூறு-10,11. கழை மாய்தல் என்றால் ஒடக்கோல் ஆழத்தில் மாய்ந்து போதலாம் - மறைந்து போதலாம் - கோலுக்கு மேல் ஆழம் உள்ளதாம். கழை யளந் தறியாக் காவிரி :- அகம்-32-10 மூங்கில் கோலால் அளந்தறிய முடியாத ஆழம். 'நாடார் காவிரிக் கோடுதோய் மலிர்நிறைக் கழையழி நீத்தம் சாஅய வழிநாள்”- அகம்-341-4,5 கோடு தோய்-கரையைத் தோய்ந்து மோதுகின்ற. மலிர் நிறை=மிகவும் பரந்து நிறைந்த வெள்ளம். கழை மாய்தல்=மூங்கில் கோல் மறைந்து போதல்-கருத்து. "மலிந்து செல்ல நீத்தம், கடற்கரை மெலிக்கும் காவிரி’-அகம்-126-35- மிகவும் பெருகிச் செல்லும் வெள்ளம் கடற்கரையைக் குத்தி மோதுகிறதாம். “காவிரி மலிர் நிறை யன்னநின் மார்பு' ஐங்குறுநூறு-7-42. “மிக்கு வரும் இன்னீர்க் காவிரி-புறநானூறு-43-22. 'கரை பொருது இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி'-புறம்-174-7,8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/44&oldid=1525464" இலிருந்து மீள்விக்கப்பட்டது