பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 'விசைவண்டி ஏறினர் இரண்டு பேரும் விரைகின்ற காவிரியின் வெள்ளம் போலே’பாரதி தாசனார்-குடும்ப விளக்கு-திருமணம்-11 புதுமண மக்கள், விரைந்து செல்லும் காவிரியின் வெள்ளம்போல் விரைந்து செல்லும் விசை வண்டியில் விரைந்து ஏறினராம். காவிரியின் பரப்பை, கடலும், காவிரியுமாய் அந்த இடம் உள்ளது என்னும் மக்கள் வழக்காற்றினால் அறிந்து கொள்ளலாம். ஞானசம்பந்தர் காவிரிக் கரையில் உள்ள திருப்பழனம் என்னும் திருப்பதியைப் பற்றிய தமது தேவாரப் பாடலில் இந்தக் குறிப்பைத் தந்துள்ளார். 'குலைவெஞ் சிலையான் மதில்முன் றெரித்த கொல்லே றுடைய அண்ணல் கலவ மயிலும் குயிலும் பயிலும் கடல்போல் காவேரி நலம் அஞ்சுடைய நறுமாங் கனிகள் குதிர்கொண் டெதிர் உந்திப் பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே' என்பது பாடல், இதில், காவிரி கடல் போன்ற பரப்பு உடையது என்னும் குறிப்பு இருப்பதைக் காணலாம். இல்வாறு இன்னும் பன்னூல்களில் காவிரியின் ஆழ மும் பரப்பும் சொல்லப்பட்டுள்ளன. திருவையாற்றில் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/45&oldid=1018932" இலிருந்து மீள்விக்கப்பட்டது