பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

46 'விதிர்த்த மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறுடைய அடிகளே' ‘'தேச மெங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொண்ர்ந்தெங்கும் வீசும் திரைக் காவிரிக்கோட்டத்து ஐயா றுடைய அடிகளே” என்பன, சுந்தரரின் திருவையாற்றுத் தேவாரப் பதிகப் பாடல் பகுதிகளாகும். பூவிரி பொலன் கழல் பொருவில் தானையான் காவிரி நாடு அன்ன கழனிநாடு ஒரீஇத் தாவர சங்கமம் என்னும் தன்மைய யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்’ பரதன் சென்றதைப் பற்றிய இப்பாடல், கம்ப ராமாயணம்-அயோத்தியா காண்டம்-கங்கை காண் படலத்தில் உள்ளது. இன்ன பல இலக்கியப் பாடல்களால், காவிரியோடு சோழ நாட்டிற்கு உள்ள உரிம்ை புலப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/48&oldid=1018939" இலிருந்து மீள்விக்கப்பட்டது