பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51. முதலியன, ஞாயிற்றுக்கு உரிய நாள் திங்களுக்கு உரிய நாள் என்னும் பொருளன. ஈண்டு நக்கீரர் திருமுரு காற்றுந் படையில் கூறியுள்ள பழமுதிர் சோலை மலை கிழவோனே’ என்னும் பகுதி ஒம்பு நோக்கத்தக்கது, முருகன் மலைக்கு உரியவன் என்னும் பொருளில் மலை கிழவோன்’ என்னும் தொடர் உள்ளது. நிலக்கிழார் என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. . கிழவன்-கிழவி என்பன முதியவர்களைக் குறிக்கத் தொடங்கிய வரலாறு வேறு. வீட்டிற்கு-குடும்பத்திற்கு உரிமையுடைய தலைவராயிருந்தவர்கள் கிழவன் கிழவி எனப்பட்டனர். பெருஞ்சித்திரனார் என்னும் புலவர் தம் மனைவியை நோக்கி, எல்லோர்க்கும் கொடு மதி மனைகிழவோயே’ என்று கூறியதாக உள்ள புற நானுாற்றுப் பாடல் (163) பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இந்த உரிமையாளர்கள் அகவை முதிர முதிரவும் கிழவன் கிழவி எனப்பட்டனர். நாளடைவில் அகவை முதிர்ந்தவர்கள் எல்லாரையும் கிழவன்-கிழவி என்று அழைக்கும் மரபு உண்ட்ர்கி விட்டது. பழைய இலக்கிய வழக்கு, முதியவர்-மூத்தோர் இத்திறத்ததுவே. மற்றும், அதே புறப்பாட்டின் (163) இறுதியில் உள்ள, - - * பழந்துங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேல் குமணன்' என்னும் பகுதியில், குமண மன்னன் முதிரமலையின் கிழவன்-உரிமையாளன் என்று கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. இந்த அடிப்படையில் நோக்குங்கால், காவிரித் கிழவன் என்பது, சாவிரிக்கு உரிமை உடையவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/53&oldid=1018948" இலிருந்து மீள்விக்கப்பட்டது