பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 “காவிரி ஊற்றின் கண் தூர்ந்தாலும் வைகை ஊற்றின் வாய் திறந்தாலும் தமிழன் உரிமையொடு காக்க வேண்டும்’ என அவர் தமிழ் உரிமை கொண்டாடியுள்ளார். காவிரிப் பெண் தமிழ் மொழியைத் தமிழ்த்தாய் எனவும் தமிழ் அணங்கு எனவும் நாம் கூறுதல் போலவே, நிலத்தையும் நீரையுங் கூடப் பெண்ணாக உருவகித்துக் கூறுதல் நமது மரபு, நிலத்தைப் பூமாதேவி, பூமகள் என்பர். - “@ು೯೯76 றசைஇ இருப்பாரைக் காணின் நிலன் என்னும் நல்லாள் நகும்” - (குறள்-1040) எனத் திருவள்ளுவரும் நிலத்தை நல்லாள்" எனப் பெண் ணாகக் கூறியுள்ளார். இன்னும், நிலமகள், மண்மகள், மண் மடந்தை முதலிய வழக்காறுகளும் உண்டு. இதே போலத் தண்ணீரையும் பெண்ணாக உரு வகித்துக் கூறுவது நமது நாட்டு மரபு. கங்கையம்மா, காவிரித்தாய் முதலிய ஆட்சிகளில் இதைக் காணலாம். மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் தண்ணிர் பாவை எனக் கூறப்பட்டுள்ளது. செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி-கடை திறப்புப் பகுதியில் பின்வரு மாறு கூறப்பட்டுள்ளது. அதாவது:- பெண்களை நோக்கி, காவிரிபோல் வரும் மடந்தையர்களே. கதவைத் திறவுங்கள் எனப் பெண்கட்குக் காவிரி ஒப்யுமையாக்கப்பட்டுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/56&oldid=1018954" இலிருந்து மீள்விக்கப்பட்டது