பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55 "பூவிரி மதுகரம் நுகரவும் பொருகயல் இரு கரை புரளவும் காவிரி எனவரும் மடநவீர் கனக நெடுங்கடை திறமினே’-(59) என்பது பாடல் பகுதி. சிலப்பதிகாரத்தில் கானல் வரிப் பகுதியில், மாதவி பாடுவதாக உள்ள இரண்டு பாடல்களில், காவிரி பெண் ணாக உருவகிக்கப் பட்டிருப்பதையும் காணலாம்! பாடல்கள்:- * மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்கயற்கண் விழித் தொல்கி நடந்தாய் வாழி காவேரி; க்ருங்கயற்கண் விழித் தொல்கி நடந்த வெல்லாம் நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”-(25) ‘பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அரு கசைய நடந்தாய் வாழி காவேரி; காமர் மாலை அரு கசைய - :*::) : நடந்த வெல்லாம் நின் கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி' (26) காவிரியாறு பூக்களாகிய ஆடையைப் போர்த்துக் கயல்களாகிய கண்களை விழித்து நடக்கின்ற பெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/57&oldid=1018955" இலிருந்து மீள்விக்கப்பட்டது