பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

56 ணாகக் கூறப்பட்டிருப்பது காண்க. மற்றும், 'காவேரி .. நின் கணவன்” என்னும் சொல்லாட்சிகளும் காவிரியைப் பெண்ணாக்கிக் காட்டியுள்ளன. சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில் "பொன்னியாம் கன்னி நீத்தமே.55 எனக் காவிரியைக் கன்னியெனக் கூறியுள்ளார். அகநானூற்றில் அழகான ஆனால் அழுகையான செய்தி ஒன்று கூறப்பட்டுள்ளது. ஆதிமந்தி என்பாளின் கணவனாகிய ஆட்டனத்தி என்பவன் காவிரியில் நீராடியபோது வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு மறைந்து போனான். அவனுடன் நீராடிக் கொண் டிருந்த ஆதிமந்தி, அழுத கண்ணுடன் அகமுடை யானைத் தேடி அலைந்து கொண்டிருந்தாளாம். இங்கே, அவள் கணவனைக் 'காவிரி என்னும் பெண் அகப் படுத்திக் கொண்டாள் என்பதாக ஒரு கற்பனைக் குறிப்பு காட்டப்பட்டுள்ளது. பாடல் பகுதி வருக: கழாஅர்ப் பெருந்துறை, விழவின் ஆடும் சட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின் ஆட்ட னத்தி நலநயந் துரைஇத் தாழிருங் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரம் துழை.இ மதிமருண் டலந்த ஆதிமந்தி........ ,’அகம்-222-5-10 மிகுந்த அழகால் பொலிவுற்ற-நிமிர்ந்து திரண்ட தோள்களையுடைய ஆட்டனத்தி என்பவனது அழகை விரும்பி அவனைக் காவிரி என்னும் பெண் கவர்ந்து கொண்டதால் ஆதிமந்தி மதிமயங்கித் தேடிக்கொண் டிருந்தாள்-என்னும் கருத்து இதில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்தச் செய்தி அகநானூற்றில் பின்வரும் பாடல்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது:- -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/58&oldid=1018959" இலிருந்து மீள்விக்கப்பட்டது