பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57 'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதி மந்தி போலப் பேதுற்று'-45-13,14. "ஆட்டன் அத்தியைக் காணிரோ என நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின் கடல் கொண் டன்றெனப் புனல் ஒளித் தன்றெனக் கஅழிந்த கண்ணள் காதலற் கெடுத்த ஆதி மந்தி போல’-236-16-2. 'கச்சினன் கழலினன் தேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் கரியலம் பொருநனைக் காண்டீரோ என ஆதி மந்தி பேதுற்று இணையச் சிறைபறைந் துரைஇச் செங்குணக் கொழுரும் அந்தண் காவிரி போலக் - கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே' 76-7-13. இந்த 76 ஆம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்தி மிகவும் சுவையானது. கச்சும் கழலும் அழகிய மாலை யும் திண்ணிய மார்பும் உடையவனும் கூத்தில் (நடனத் தில்) வல்லவனும் ஆகிய ஆட்டனத்தியை, அவன் காதலி ஆதிமந்தி வருந்தும்படி, கரையை மோதி ஒடும் காவிரி பற்றிக் கொண்டது போல, யான் தலைவனைப் பற்றிக் கொள்வேன் என்று பரத்தை யொருத்தி தலைவனின் மனைவியின் தோழியர் கேட்பக் கூறினாள் என்பது கருத்து. இது சுவையான ஒரு கருத்தன்றோ ! பாரதிதாசனாரும் இதுபற்றிக் கூறியுள்ளார். குடும்ப விளக்கு-மக்கட்பேறு என்னும் பகுதியிலுள்ள அவரது பாடல் பகுதியாவது:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/59&oldid=1018961" இலிருந்து மீள்விக்கப்பட்டது