பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 வடக்கேயிருந்து வருபவர்கள் காவிரித் துறையில் நீராடுவர் என்பது இதனால் புலனாகிறது. 'தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம் பார்ப்பணி மருதி'-மணி-22-40,41 மருதி என்னும் கற்பிற் சிறந்த பார்ப்பணி காவிரி நீராடியதை இது குறிக்கிறது. "தீர்த்தநீர் வந்திழிதரு பொன்னியின் பனிமலர் வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி” - சம். தே-2-2-9-6. பொன்னியின் தீர்த்த ಹೆ/7quafಹ೦ಗಿನ துன்பம் நீங்கும் என்பது கருத்து. "காவிரிநீர்ப் பெருந்தீர்த்தம் கலந்தாடிக் கடந்தேறி ஆவின் அருங்கன் றுறையும் ஆவடுவண் துறை". . பெ. பு. 35.77. வடக்கேயிருந்து தெற்கு நோக்கி வந்த முனிவர் ஒருவர் தெய்வக் காவிரியில் நீராடித் திருவாவடு துறையை அடைந்தாராம். "பொய்யாத பொன்னிப் புதுமஞ்சனம் ஆடி” விக்கிரம சோழன் உலா-81 “மன்னன் குலப் பொன்னி ஆடுதிரால்”. - வி, சொ. உ-500, இவ்வாறு காவிரி மக்கள் நீராடுவதற்கேற்ற பெருமை உடையதாயுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/66&oldid=1018984" இலிருந்து மீள்விக்கப்பட்டது