பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

67 'சுரந்து காவிரி புரந்து நீர்பரக்கவும்’ - மணி-15-48

சாலி நெல்லின் சிறைகொள் வேலி ஆயிரம் விளையுட் டாகக்

காவிரி புரக்கும் நாடு கிழவோனே” - பொருந ராற்றுப்படை: 246-48 ஒரு வேலி நிலம் ஆயிரக்கணக்கான கலம் நெல் விளையச் செய்து காவிரி நாடு காக்கிறதாம். தென் னார்க்காடு மாவட்டத்தில் வழங்கப்படும் ஒரு காணி போல் ஐந்து மடங்கு கொண்டது ஒரு வேலி எனக் கூறப் படுகிறது. கிழவோன் என்பதற்கு, தனக்கே உரித்தாம் தன்மையுடையோன் என நச்சினார்க் கினியர் பொருள் கூறியுள்ளார். " தாங்கா விளையுள் காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்தி - சிலம்பு-6 : 30-32. வடக்கேயிருந்து விஞ்சையன் ஒருவன் தன் மனைவி யுடன், காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெற்ற இந்திர விழாவைக் காணவந்தான். வரும் வழியில் உள்ள பல இடங்களையும், மற்றும் காவிரி பாயும் சோழ நாட்டை யும் மனைவிக்குக் காட்டிப் புகார் அடைந்தான். காவிரி தாங்கா விளையுள்ால் நாடு காக்கிறது. தாங்கா விளையுள் என்பதற்கு, நிலம் தாங்க முடியாத விளைச் சல்-நாடு தாங்க முடியாத விளைச்சல்-என்றெல்லாம் பொருள் பண்ணலாம். அப்படியென்றால், கொட்டி வைக்க இடம் இல்லாமலும், எத்தனைப்பேர் உண்டா லும் தீராமலும் மிக்குள்ள நெல் முதலியன எனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்காவிரி.pdf/69&oldid=1018990" இலிருந்து மீள்விக்கப்பட்டது